இரு விடைகளுடன் இரு புதிர்கள் TAMIL PICTURE PUZZLE

இரு விடைகளுடன் இரு புதிர்கள்

புதிர் 1

மேலுள்ள கணித புதிரில் உங்கள் விடை 40 ஆக இருக்கலாம்.

சாதாரண கூட்டலில்

1+4=5,

5+2+7=12

12+3+6=21

ஆகவே 21+8+11=40

ஆனால் சரியான விடை 96 என நிரூபிக்க முடியுமா?

 

புதிர் 2

மேலுள்ள படப் புதிரின் விடை 16 என தவறாக நினைத்து விடாதிர்கள். உங்கள் வாதத்தின் படி

மூன்று ஆப்பிள் =30, எனவே ஒருஆப்பிள் 10

ஒரு ஆப்பிள்+ இரு வாழை= 18, எனவே வாழை=4

வாழை-  தேங்காய்=2. எனவே தேங்காய்=2

ஆகவே ஆப்பிள்+வாழை+தேங்காய்=10+4+2=16

ஆனால் விடை 14 எப்படி?

சரியான விடைகள் இரு விடைகளுடன் இரு புதிர்கள்

(more…)

உங்கள் கவனயீனத்தை சோதிக்க இரு எளிய புதிர்கள் (TAMIL PUZZLE)

உங்கள் கவனயீனத்தை சோதிக்க இரு எளிய புதிர்கள் (TAMIL PUZZLE)

1)ஆங்கிலம் வாசிக்க தெரிந்த உங்களுக்கான புதிர் இது.இப் புதிரில் எவ்விதமான வித்தையும் இல்லை. கீழே உள்ள இலகுவான ஆங்கில வாக்கியத்தை உங்களால் வேகமாக வாசிக்க முடியுமா?

FINISHED FILES ARE THE

RESULT OF YEARS OF SCIENTIFIC

STUDY COMBINED WITH THE

EXPERIENCE OF YEARS

ஒரு முறை வேகமாக வாசித்த உங்களுக்கான புதிர் இன்னும் ஒரே ஒரு முறை வாசித்து இவ் வாக்கித்தில் எத்தனை “F” எழுத்துகள் உள்ளன எனக் கண்டுபிடிக்கவும்.

2)கூட்டல் கணிதம் தெரியுமா? உங்கள் கணித திறமையை சோதிக்க இந்த எளிய கூட்டலிற்கு விடையை மனதால் வேகமாக கூட்டவும்.
முதலில் 1000 உடன் 40 ஐக் கூட்டவும்
அத்துடன் இன்னும் 1000 ஐக் கூட்டவும்
அதனுடன் 30 ஐயும் பின் இன்னும் 1000 ஐக் கூட்டவும்
வரும் விடையுடன் மேலும் 20 ஐக் கூட்டவும்
கடைசியாக மீண்டும் 1000 ஐக் கூட்டி மேலும் 10 ஐக் கூட்டவும்.
கணக்குப் புலிகள் சறுக்கும் இக் கூட்டலுக்கான விடை என்ன?

 

“உங்கள் கவனயீனத்தை சோதிக்க இரு எளிய புதிர்கள் (TAMIL PUZZLE)” இற்கான விடைகள்

(more…)

படப் புதிர் Tamil Picture Puzzle

படப் புதிர் Tamil Picture Puzzle

1)கீழ் வரும் படத்தில் முதலில் நிரம்பும் பாத்திரம் எது?

2) இப் படத்திலுள்ள பஸ் வண்டி திசை “A”யை நோக்கிச் செல்கிறதா அல்லது “B” யை நோக்கிச் செல்கிறதா?

(more…)

தொலைப்பேசி எண்ணை கண்டுபிடிக்க ஒரு புதிர் (Telephone number Tamil trick)

தொலைப்பேசி எண்ணை கண்டுபிடிக்க ஒரு புதிர்  (Telephone number Tamil trick)

இப் புதிர் மூலம் ஒருவரின் தொலைப்பேசி எண்ணின் இலக்கங்களை அறியலாம். டயலொக், மொபிடெல், எடிசலாட் ஹட்ச் என்பவற்றிற்கு பொதுவான 07க் ஐத் தவிர்து ஏனைய எண்களை அறியலாம்.உதாரணத்திற்கு ஒருதொலைப்பேசி எண் 0771234567 எனின் 71234567 இனை கண்டுபிடிக்கலாம்.  இதற்கு கணிப்பான் (calculator) அவசியம். பின்வரும் வழிமுறையை பின்பற்றவும்.

 1. முதல் நான்கு எண்களை எடுக்கவும். இவ் உதாரணத்தில் 7123.
 2. அதனை 80ஆல் பெருக்கவும்- 7123*80=569840
 3. அத்துடன் ஒன்றைக் கூட்டவும்- 569840+1=569841
 4. பின் மீண்டும் 250 ஆல் பெருக்கவும்- 569841*250=142460250
 5. வந்த விடையுடன் தொலைப்பேசி எண்ணின் கடைசி நான்கு எண்களை கூட்டவும்- 142460250+4567=142464817
 6. மீண்டும் ஒரு முறை தொலைப்பேசி எண்ணின் கடைசி நான்கு எண்களை கூட்டவும்- 142464817+4567=142469384
 7. அத்துடன் 250 ஐக் கழிக்கவும்-142469384-250=142469134
 8. கடைசியாக வந்த விடையினை இரண்டால் வகுக்கவும்- 142469134/2                                                                     என்ன ஆச்சரியம்!142469134/2=71234567

இதனை கண்டுபிடித்த வழிமுறை இதோ (more…)

இறை தூதரின் கூற்றை உண்மைபடுத்திய கிறிஸ்தவர்

இறை தூதரின் கூற்றை உண்மைபடுத்திய கிறிஸ்தவர்

%e0%ae%a4%e0%ae%9c%e0%af%8d%e0%ae%9c%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d

இறைவனின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களுக்கு ஆர்வமூட்டுவதற்கோ அச்சுறுத்துவதற்கோ நான் உங்களை ஒன்றுகூட்டவில்லை. மாறாக, (மற்றொரு தகவலைச் சொல்வதற்காகவே) உங்களை ஒன்றுகூட்டினேன். கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த தமீமுத் தாரீ எனும் ஒரு மனிதர் (என்னிடம்) வந்து வாக்குறுதிப் பிரமாணம் அளித்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்.
அவர் என்னிடம் ஒரு செய்தியைச் சொன்னார். அது(பெருங்குழப்பவாதியான) மசீஹுத் தஜ்ஜால் குறித்து நான் உங்களிடம் தெரிவித்திருந்த செய்திக்கு ஒத்திருந்தது. அவர் என்னிடம் கூறினார்:
நான் “லக்ம்” , “ஜுதாம்” ஆகிய குலங்களைச் சேர்ந்த முப்பது பேருடன் ஒரு கப்பலில் கடல் பயணம் மேற்கொண்டேன். அப்போது கடல் அலை ஒரு மாதகாலம் எங்களைக் கடலில் அலைக் கழித்துவிட்டது. பிறகு நாங்கள் கடலில் சூரியன் அஸ்தமிக்கும் (மேற்குத்) திசையில் ஒரு தீவில் ஒதுங்கினோம். பிறகு நாங்கள் சிறிய மரக்கலம் ஒன்றில் அமர்ந்து அங்கிருந்த தீவுக்குள் சென்றோம்.
(more…)

புத்திசாலி பெர்னாட்ஷா

புத்திசாலி பெர்னாட்ஷா

 

george_bernard_shaw_statue-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b7%e0%ae%be

அறிஞர் பெர்னாட்ஷா சிறுவயதில் வறுமையில் வாடினார். அவருடைய தந்தை மகாகுடிகாரர். குடும்ப பொறுப்பு இல்லாதவர். பெர்னாட்ஷாவின் தாய் குழந்தைகளுக்கு சங்கீதம் சொல்லிக் கொடுத்தார். அதன் முலம் கிடைக்கும் குறைந்த வருமானத்தைக் கொண்டே குடும்பத்தை நடத்தி வந்தார். அதனால், மகனுக்கு நல்ல கல்வியை அவரால் கொடுக்க முடியவில்லை.

(more…)

10 புதிர் விடுகதைகள்

     10 புதிர் விடுகதைகள்

puthirkal

 

 1. கீழே வரும் ஆனால் மேலே போகாது. அது என்ன?
 2. அடிப் பாதை இருக்கும் கால் இருக்காது.அது என்ன?
 3. இளமையில் உயரம் முதுமையில் கட்டை அது என்ன?
 4. மாடிகளற்ற வீட்டில் எல்லா பொருட்களும் நீல நிற பூச்சு பூசப்பட்டிருப்பின் அதன் படிகள் எந்த நிறத்தில் இருக்கும்?
 5. உலகம் முழுதும் சுற்றும் ஆனால் ஒரே இடத்திலேயே இருக்கும்,அது என்ன??
 6. கைகள் இருக்கும் ஆனால் கைதட்ட முடியாது,அது என்ன?
 7. இறக்கையை விட மென்மையானது, ஆனால் உலகின் பலமிக்க மனிதராலும் சில நிமிடங்கள் பிடித்து வைத்திருக்க முடியாது. அது என்ன?
 8. சில இடங்களில் ஒட்டப்பட்டிருக்கும், அதை வாசித்தால் அதன் அர்த்தம் முறிந்துவிடும்.  அது என்ன?
 9. கண் உண்டு, ஆனால் பார்க்க முடியாது. அது என்ன?
 10. வெள்ளை வீடு கருப்புக் கல்லாலும், கருப்பு வீடு வெள்ளை கல்லாலும் கட்டப்பட்டிருப்பின் பச்சை வீடு எதனால் கட்டப்பட்டிருக்கும்?

(more…)

விஞ்ஞான விளக்கம்

விஞ்ஞான விளக்கம்

 1. நன்னீரை விட கடல் நீர் ஏன் நீச்சலுக்கு இலகுவானது ?
 2. வட்டமாக மிக வேகமாகச் சுற்றுபவன் திடீரென நின்றால் தலைசுற்றி மயக்கம் ஏற்படுவது ஏன்?
 3. பீங்கான் அல்லது கண்ணாடி கப்பில் சூடான பானங்களை விடும்போது கப் உடைந்துபோவதுண்டு ஏன்?
 4. ஒரு பெரிய ஐஸ் கட்டியைக் காற்றில் திறந்து வைத்தால் அதிலிருந்து வெண்ணிறமான புகை (FUMES) கிளம்புகிறது  ஏன்?

1) நன்னீரை விட கடல் நீர் ஏன் நீச்சலுக்கு இலகுவானது ?

நன்னீர் நிறைந்த ஆறு, குளம், நீச்சல் தடாகம் போன்றவற்றில் நீந்திப் பழுகுவதைப் பார்க்கிலும் கடலில் நீச்சல் பழகுவது இலகுவான தென்பது அனைவருக்கும் தெரியும்.

நீரின் அடர்த்தி வேறுபாடே இதற்குக் காரணம். நன்னீரை விட கடல் நீரின் அடர்த்தி அதிகமானது. உப்புச் செறிவே இதற்குக் காரணம்.

அடர்த்தி கூடிய பொருள் கீழே அமிழும். அடர்த்தி குறைந்த பொருள் மேல் நோக்கிச் செல்லும். கல்துண்டு நீரில் அமிழ்வதற்கும் பிளாஸ்டிக் துண்டு நீரில் மிதப்பதற்கும் இதுவே காரணம்.

நன்னீரை விட கடல் நீரின் அடர்த்தி கூடுதலாக இருப்பதால் நாம் நீந்தும் போது மிதப்பதற்கு மேற்கொள்ளும் முயற்சி இலகுவாகிறது. கடல் நீரில் நீச்சல் பழகுவது இலகுவாக இருப்பதற்கான தத்துவம் இது தான்.

2)வட்டமாக மிக வேகமாகச் சுற்றுபவன் திடீரென நின்றால் தலைசுற்றி மயக்கம் ஏற்படுவது ஏன்?

(more…)

வாழ்க்கையின் உண்மை கதை

வாழ்க்கையின் உண்மை கதை

என் நண்பன் ஒரு நாள் என்னிடம் கூறினான். எனது மாமனார் வயதான மனிதர்.அவரது மகன்கள் தொழுகையற்றவர்கள். அவரும் தொழுகையற்றவர். அவர் பள்ளிக்குச் செல்வதில்லை, வேறு நற்காரியங்களையும் செய்வதில்லை. ஒரு நாள் நான் அவரிடம் கேட்டேன்.

உங்களுக்குத் தெரியுமா? சிங்கத்திடமிருந்து வெருண்டோடியவனைப் பற்றி. “இல்லை” என்றார் அவர். நான் ” ஓரு பையன் காட்டின் வழியே சென்று கொண்டிருந்தான். அவன் கர்ச்சனை சத்தம் கேட்டுத் திரும்பிப்பார்த்தான் . ஒரு சிங்கம் அவனை உண்பதற்கு அவனை நோக்கி வந்து கொண்டிருந்தது. சிங்கம் பின்னால் விரட்ட அவன் பயத்தால் வெருண்டோடினான். சிங்கம் அவனை அணுகும் தருவாயில்,  அருகில் ஓர் கிணற்றைக்கண்டான். கிணற்றில் பாய்ந்து அதன் கயிற்றைப் பற்றிக் கொண்டான். அதில் அவன் சற்று ஓய்வெடுக்க சிங்கத்தின் கர்ஜனையும் அடங்கியது. ஆனால் உடனே கிணற்றின் கீழால்பாம்பு சீறத்தொடங்கியது. சிங்கத்திடமிருந்தும் பாம்பிடமிருந்து எவ்வாறு தப்புவது என எண்ணும் போது. இரு எலிகள் ஒன்று வெள்ளை
மற்றது கருப்பு,  இரண்டும் கயிற்றை அரிக்க கயிறு அறும் தருவாயில், அப் பையன் கயிற்றை உலுக்கினான் எலிகள் கீழேவிழும் என்ற எண்ணத்தில். ஆனால் ஒரு முயற்சியும் பயனளிக்கவில்லை. அக் கயிறு அறும் தருவாயில், ஓர் ஆச்சரியம் !!!கயிற்றில் தேன் வழிவதைக் கண்டு அதனை சுவைத்துச் சாப்பிட்டான். அவனை சுற்றியிருந்த ஆபத்துகளான எலிகள், கர்ஜிக்கும் சிங்கம், கொடும் விஷப் பாம்பையும் மறந்தான்.” என கதையை கூறினேன். (more…)

பூனைக்கு மணி கட்டிய புத்திசாலி எலி – புதிர்

பூனைக்கு மணி கட்டிய புத்திசாலி எலி – புதிர்

பூனைக்கு மணி கட்டிய புத்திசாலி எலி - புதிர்

ஒரு வீட்டில் நிறைய எலிகள் இருந்தன. அவை அனைத்தும் ஒன்று சேர்ந்து கூட்டம் போட்டன.

ஓர் எலி எழுந்து, ‘இங்குள்ள பூனையின் கொடுமை தாங்க முடியவில்லை; நாள்தோறும் நான்கைந்து எலிகளைக் கொன்று தின்கின்றது. நம் இனம் நாளுக்கு நாள் அழிந்து கொண்டே வருகி றது. நாம் அதனிடமிருந்து தப்பி க்க ஏதேனும் வழி கண்டாக வேண்டும்’ என்று உணர்ச்சியுடன் பேசியது.

கிழ எலி ஒன்று எழுந்து, ‘நீ சொல்வது உண்மைதான். நாம் எல்லோரும் பூனைக்கு அஞ்சி அஞ்சித்தான் வாழ்கிறோம். அதனிடமிருந்து தப்பிக்க வழி ஏதும் இருப்பதாகத் தெரியவில்லையே, என்ன செய்வது?’ என்றது.

அங்கிருந்த சுண்டெலி ஒன்று எழுந்தது. ‘நாம் எதிர்பாராத நேரத்தில் பூனை நம் மீது பாய்ந்து பிடித்துக் கொள்கிறது. நம்மால் தப்பிக்க முடியவில்லை. பூனை வருவது நமக்கு முன்னரே தெரிந்தால் நாம் அதனிடமிருந்து தப்பிக்க முடியும்.

நாம் எப்படியாவது முயன்று பூனையின் கழுத்தில் ஒரு மணியைக் கட்டிவிட்டால் போதும். அது வரும் போதெல்லாம் மணி ஓசை நமக்குக் கேட்கும். நாம் வளைக்குள் பாதுகாப்பாகப் பதுங்கிக்கொள்ளலாம். பூனையால் நம்மைப் பிடிக்கவே முடியாது’ என்றது.

‘ஆ! அருமையான திட்டம். இனி அந்தப் பூனையால் நம்மைப் பிடித்துத் தின்ன முடியாது’ என்று பல எலிகள் அந்தச் சுண்டெலியைப் பாராட்டின.

‘திட்டம் நல்ல திட்டம்தான். அதை நிறைவேற்றுவதில் ஒரு சிக்கல் உள்ளதே’ என்றது கிழ எலி ஒன்று.

‘பூனையின் கழுத்தில் மணி கட்டப் போவது யார்? நீங்களா அல்லது திட்டத்தைச் சொன்ன சுண்டெலியா? நம்மால் பூனையின் அருகே சென்று உயிருடன் திரும்ப முடியுமா? இயலாத செயலுக்கு ஏன் இப்படி ஆரவாரம் செய்கிaர்கள்?’ என்றது அது.

அப்பொழுதுதான் மற்ற எலிகளுக்கும் ‘பூனையின் கழுத்தில் மணி கட்டுவது இயலாத செயல்’ என்பது புரிந்தது.

எல்லா எலிகளும் தலையை கவிழ்த்தன. ஆனால் இரு இளம் எலிகள் இரு வேறு யோசனைகள் கூறி பூனையின் கழுத்தில் மணியைக் கட்டின. அவற்றைக் கேட்டு வியந்த மற்றைய எலிகள் இவ்விரு எலிகளின் புத்திக் கூர்மையை மெச்சின. அடுத்தநாள் பூனை வரும்போது மணியோசை கேட்டது. எலிகள் ஓடி ஒளிந்தன. பூனைக்கு ஏமாற்றம். அதற்குப் பிறகு, பூனையால் அந்த வீட்டில் ஓர் எலியைக்கூட பிடிக்க முடியவில்லை. இவ்விரு யோசனைகளில் உங்களால் ஒன்றாவது கூற முடியுமா?

விடை பூனைக்கு மணி கட்டிய புத்திசாலி எலி – புதிர் (more…)

8 Comments

 1. maha June 17, 2017 11:09 am  Reply

  Brilliant idea

 2. Ezhilarasan July 14, 2017 7:05 am  Reply

  Oru velai kutty punai thoongiturukum podhu…thaai poonai vettayada thaniaga vandhal eligal ena seium

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *