அரேபிய நகைச்சுவை புதிர்

அரேபிய நகைச்சுவை புதிர்

puthisali.com

puthisali.com

முன்னொரு காலத்தில் அரேபியர் ஒருவர் வித்தியாசனமான நகைச்சுவை முறையில் உயில் எழுதினார். அவரெழுதியவதாவது

“நான் எனது சொத்துகள் முழுவதையும் ஒரு குறிப்பிட்ட பாலைவன பசுஞ்சோலையில் புதையலாக புதைத்துள்ளேன். என் இரு புதல்வர்களில் எவரது ஒட்டகம் இரண்டாவதாக அந்த பாலைவன பசுஞ்சோலையை சென்றடைகிறதோ அவருக்கு மட்டுமே முழுச் சொத்தும் உரியதாகும்.”

அவர் இறந்த பின் இரு புதல்வர்ளும் குழப்பத்தில் ஆழ்ந்தனர். முதலாவது சென்றடையும் ஒட்டகத்துக்கு புதையல் எனில் இருவரும் போட்டி போட்டிருக்கலாம். இரண்டாமிடத்துக்கே சொத்து என்பதால் ஒட்டகங்கள் போட்டியாக மெதுவாக சென்றால் இரண்டுமே பாலைவன மத்தியில் இறந்துவிடும்!  எனவே இருவரும் இப்பிரச்சினையை தீர்க்க காதியை (நீதிபதியை ) நாடினர். காதியோ சில வினாடிகளில் இருவரின் காதுகளில் எதையோ முணுமுணுத்தார். உடனே இருவரும் ஒட்டகங்களில் சிட்டாக பறந்தனர். காதி எப்படி புதிரைத் தீர்த்தார்?

விடை – அரேபிய நகைச்சுவை புதிர்

காதி இருவரிடமும் உங்கள் ஒட்டகங்களை மாற்றி எடுத்து (அதாவது ஒருவர் மற்றவரது ஒட்டகத்தை எடுத்துச் ) செல்லவும் என்று கூறினார்.


5 Comments

  1. MOHAMED February 20, 2014 1:11 pm  Reply

    FUNNY AND INTERESTING

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *