அறிவாளி தவளை

, , Leave a comment

குளத்தங்கரை அருகே இரண்டு காளை மாடுகள் பயங்கரமாகச் சண்டை போட்டுக் கொண்டிருந்தன.

இதைப் பார்த்த ஒரு தவளை “காளை மாடுகள் சண்டையிடுகின்றன. நாம் உடனே இங்கிருந்து செல்ல வேண்டும்” என்று தன் கூட்டத்தைப் பார்த்துச் சொல்லியது.

“காளை மாடுகள் தங்களுக்குள் யார் வலிமையானவன் என்பதைத் தெரிந்து கொள்வதற்காகச் சண்டை போடுகின்றன. அதற்காக நாம் ஏன் இங்கிருந்து செல்ல வேண்டும்?” என்று கேட்டது இன்னொரு தவளை.

அதற்கு அது “எந்தக் காளை தோற்றாலும் அது நாம் இருக்கும் இடத்திற்கு விரட்டப்படும். தோற்ற கோபத்தால் அது குளத்தை அலக்கழிக்கும். அதன் கால்களில் சிக்கி நம்மில் பலர் சாக வேண்டிவரும். பிறகு நாம் எப்படி இங்கே வாழ்வது? நாம் எல்லோரும் பாதுகாப்பான வேறு இடத்திற்குச் சென்று விடுவோம்” என்று நடக்கப் போவதை விளக்கியது.

சில தவளைகள் அதன் பேச்சைக் கேட்டு அங்கிருந்து வெளியேறின.

பல தவளைகள் அதைக் கேலி செய்து சிரித்தன. தோற்ற காளை மாடு குளத்தை நோக்கி வேகமாக ஓடி வந்தது. அங்கிருந்த தவளைகள் பல அதன் கால்களில் சிக்கி மாண்டன.

 

Leave a Reply