இனைய தள புதிர்கள்

, , Leave a comment

மேலுள்ள இனைய தள புதிர்கள் இனையத்தை சுற்றி வருவதை அறிந்திருப்பீர்கள்.

1.ஒன்றுக்கு மூன்றும் இரண்டுக்கு நான்கும் ஆறுக்கு இரண்டும் எனின் ஐந்துக்கு எத்தனை?

2. என் வயது என் தம்பியின் வயதின் நான்கு மடங்காகும். இன்னும் இருபது வருடத்தில் அவன் என் வயதின் சரி பாதி வயதில் இருப்பான். எமது தற்போதைய வயது என்ன?

3. ஒரு வட்டத்திற்கு எத்தனை பக்கங்கள் உள்ளன?

4. 1=5, 2=10, 3=215, 4=3215 எனின் 5=?

விடைகள் இனைய தள புதிர்கள்

  1. முதல் புதிர் கணித புதிர் அல்ல. ஒன்றுக்கு மூன்றும் இரண்டுக்கு நான்கும் ஆறுக்கு இரண்டும் எனின் ஐந்துக்கு எத்தனை? இங்கு ஒன்றுக்கு மூன்று எழுத்துகளும் இரண்டு என்பதில் நான்கு தமிழ் எழுத்துகளும் ஆறு என்பதில் இரு எழுத்துகளும் உள்ளன. எனவே ஐந்தில் மூன்று தமிழ் எழுத்துகள் உள்ளன. ஆகவே விடை மூன்று.
  2. என் வயது என் தம்பியின் வயதின் நான்கு மடங்காகும். இன்னும் இருபது வருடத்தில் அவன் என் வயதின் சரி பாதி வயதில் இருப்பான். எமது தற்போதைய வயது என்ன? தற்போது எனது வயது 40 உம் எனது தம்பியின் வயது 10 உம் ஆகும். இன்னும் இருபது வருடத்தில் 60 உம் அரைவாசி 30 உம் ஆக இருக்கும்.
  3. ஒரு வட்டத்திற்கு எத்தனை பக்கங்கள் உள்ளன? விடை இரு பக்கங்கள். ஒன்று உள் பக்கம், மற்றது வெளிப் பக்கம்.
  4. 1=5, 2=10, 3=215, 4=3215 எனின் 5=? விடை ஐந்து. 1=5 எனவே 5=1

மேலும்

Facebook Comments

 

Leave a Reply