கிரிக்கட் போட்டிகள் எத்தனை? புதிர்

, , 1 Comment

கிரிக்கட் போட்டிகள் எத்தனை? புதிர்

Asia Cup

மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டித் தொடரில் ஐந்து நாடுகள் பங்கேற்க உள்ளன. அவை இலங்கை, பாகிஸ்தான், இந்தியா, பங்காளதேஷ் மற்றும் அப்கானிஸ்தான் ஆகும். இப் போட்டித் தொடரின் முதல் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்றைய எதிரணியுடன் தலா ஒரு போட்டியில் மாத்திரம் பங்குகொள்ளும். இதில் புதிர் என்னவெனில் இப் போட்டித் தொடரின் முதல் சுற்றில் மொத்தம் எத்தனை போட்டிகள் நடைபெரும்? ஒவ்வொன்றாக எழுதிப் பார்க்காமல் சட்டென்று விடையை கூற முடியுமா?

விடை கிரிக்கட் போட்டிகள் எத்தனை? புதிர்

 

மொத்தப் போட்டிகள்=5!/(5-2)!2!

= 120/(6)2

=10 போட்டிகள்

இதற்கான சமன்பாடு

nCr(n,r) = n! / (n-r)!r!

n= மொத்த அணிகளின் எண்ணிக்கை -அதாவது இங்கு 5

r= ஒரு தடவையில் மோதும் அணிகள் -அதாவது இங்கு 2

!=Factorial  அதாவது

0! = 1
1! = 1
2! = 2 x 1 = 2
3! = 3 x 2 x 1 = 6
4! = 4 x 3 x 2 x 1 = 24
5! = 5 x 4 x 3 x 2 x 1 = 120 and so on

 

இச் சமன்பாடு மூலம் எப் போட்டித் தொடரிற்குமான போட்டிகளின் எண்ணிக்கையை கணிக்கலாம்.

 

One Response

Leave a Reply