கோழி கணக்கு புதிர்

கோழி கணக்கு புதிர்

இரு பெண்கள் சந்தையில் கோழி விற்பனை செய்து வந்தனர். முதல் பெண் இரு கோழிகளை 1000 ரூபாவிற்கு விற்பாள், மற்றையவளோ மூன்று கோழிகளை 1000 ரூபாவிற்கு விற்று வந்தாள். இருவரும் தலா 30 கோழிகளை தினமும் விற்று வந்தனர். அதாவது நாளின் முடிவில் முதலாமவள் 15000 ரூபாவும் இரண்டாமவள் 10000 ரூபாவும் வருமானமாக பெற்றனர்.

கோழி கணக்கு புதிர் 1

ஒரு நாள் முதலாம் பெண் நோயுற்றாள். எனவே இரண்டாமவள் அவள் கோழிகளையும் சேர்த்து சந்தைக்கு 60 கோழிகளை எடுத்துச் சென்றாள். குறுக்கு வழியில் யோசித்த அவள் (முதலாமவளின் 2 கோழிகள் 1000+ தனது 3 கோழிகள் 1000 என சேர்த்து)  5 கோழிகளை 2000 ரூபாவிற்கு விற்றாள். கடைசியில் 60 கோழிகளையும் விற்ற பின் 24000 ரூபாவே கிடைத்தது. வழமையாக இருவரும் மொத்தமாக 25000 ரூபாவே பெற்று வந்தனர். 1000 ரூபா குறையவே முதலாமவளோ இரண்டாமவள் 1000 ரூபாவை திருடியிருப்பாள் என சந்தேகப்பட்டாள். இரண்டாமவள் 1000 ரூபாவை திருடினாலா? அல்லது அந்த 1000 ரூபாவிற்கு என்ன ஆயிற்று? அவள் எவ்வாறு தான் திருடவில்லை என்பதை நிரூபிப்பாள்?

விடை கோழி கணக்கு புதிர்

2000 ரூபாவிற்கு 5 கோழிகள், இதில் முதலாமவளின் 2 கோழிகளும் இரண்டாமவளின் 3 கோழிகளும் ஒரு முறையில் விற்கப்படும். 12 முறையில் 60 கோழிகளும் விற்கப்பட வேண்டும். இங்கு 10 ஆம் முறை விற்கும் போது முதலாமவளின் 20 ஆவது கோழியும் இரண்டாவளின் 30 ஆவது (கடைசி)  கோழியும் விற்கப்படும். 11,12 ஆம் முறைகளில் முதலாவளின் 10 கோழிகள் மாத்திரமே விற்கப்படும். அவற்றில் 4 முதலாமவள் விலைக்கும் 6 இரண்டாமவளின் விலைக்கும் விற்கப்படுவதால் அவ் 6 கோழிகளினாலேயே 1000 ரூபா நட்டம் ஏற்படுகிறது.

அதாவது 6 கோழிகளின் உண்மை விலை =3000

6 கோழிகளை விற்றவிலை= 2000

எனவே நட்டம் 1000 ரூபா.


2 Comments

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *