சிறையில் யூசுப் நபியின் கனவின் விளக்கம்

, , Leave a comment

சிறையில் யூசுப் நபியின் கனவின் விளக்கம்

யூசுப் (அலை) அவர்கள் எகிப்திய அரசனின் மனைவியின் சூழ்ச்சியின் காரணமாக சிறை சென்ற வேளையில் வேறு இரு வாலிபர்களும் வேறு குற்றங்களுக்காக அவர்களுடன் சிறையிலிருந்தார்கள். அவர்களில் ஒருவன் யூசுஃப் (அலை) அவர்களிடம் “நான் (திராட்சையைப் பிழிந்து) மதுரசம் தயார் செய்து கொண்டிருந்ததாக நிச்சயமாக என்னை நான் (கனவில்) கண்டேன்” என்று கூறினான். மற்றவன் என் தலையின் மீது ரொட்டியை சுமந்துக் கொண்டிருக்க அதிலிருந்து பட்சிகள் (கொத்திப்) புசிப்பதாக நிச்சயமாக என்னை நான் கனவில் கண்டேன்” என்று கூறினான். இந்த கனவிற்காக விளக்கத்தை யூசுப் (அலை) அவர்களிடத்தில் கேட்ட போது

எவன் மதுரசம் பிழிவதை போல் கனவு கண்டானோ அவன் மிக விரைவில் 
விடுதலையாகி உன்னுடைய எஜ்மானனுக்கு மதுரசம் பிழிவாய், 
மற்றொருவன் சிலுவையில் அறையப்பட்டு இறப்பான்,  இறந்தபின் 
அவனின் உடலை பறவைகள் கொத்தி  தின்னும் 
இதுவே உங்களுடைய கனவின் விளக்கம் என்று கூறினார் . 

பிறகு சிறிது காலம் சென்ற பிறகு அந்நாட்டு மன்னன் ஒரு கனவு கண்டான் அதில்
கொழுத்த ஏழு பசுக்களை மெலிந்த ஏழு பசுக்கள் புசிப்பதாகவும்,
 நன்கு விளைந்த ஏழு கதிர்களையும், காய்ந்த (வேறு) ஏழு கதிர்களையும் 
கண்டான்
அதனை கேட்ட  நபி யூசுப் அலைஹிவசல்லம் அவர்கள் 
முதல் ஏழு ஆண்டுகள் நீங்கள் விவசாயம் செய்வதை போல் செய்வீர்கள் அதில் 
உங்களுக்கு தேவையானதை எடுத்துக்கொண்டு மீதம் உள்ள பொருட்களை 
சேமித்து கொள்ளுங்கள். அதன் பிறகு கடுமையான பஞ்சம் ஏற்படும் அதில் 
உணவிற்கே கஷ்டம் வரும் அப்பொழுது சேமித்தவற்றில் இருந்து தற்காத்து
 கொள்ளலாம் பிறகு ஒரு ஆண்டு வரும் அதில் மழை பொழிந்துகொண்டே 
இருக்கும் அப்பொழுது அனைவரும் பழரசங்கள் பிழிந்தவர்களாக  
இருப்பார்கள் என்று விளக்கம் கொடுத்தார்கள்

 

Leave a Reply