யோசிக்க இரு தர்க்க புதிர்கள் – TAMIL LOGIC PUZZLE

, , 1 Comment

யோசிக்க இரு தர்க்க புதிர்கள் – TAMIL LOGIC PUZZLE

http://puthisali.com/
http://puthisali.com/

1) ஓர் ஊரில் இரு முடி திருத்துபவர்கள் இருந்தனர். அவர்களில் ஒருவரது தலையோ அலங்கோலமாக இருந்தது. மற்றையவரதோ அழகாக வெட்டப்பட்டு இருந்தது. நீங்கள் இவ் இருவரில் எவரிடம் முடி வெட்டச் செல்வீர்கள்? காரணம் என்ன?

2) மூன்று பெட்டிகளில் ஆறு பந்துகள் உள்ளன. முதலாவதில் இரு வெள்ளை (W) நிறப் பந்துகளும்  இரண்டாவதில் இரு கருப்பு (B) நிறப் பந்துகளும் மூன்றாவதில் ஒரு வெள்ளை நிறப் பந்தும் ஒரு கருப்பு நிறப் பந்தும் (B&W) உள்ளன. இம் மூன்று பெட்டிகளினதும் பெயர்கள் தவறாக இடப்பட்டுள்ளன. உங்களுக்கு ஏதேனும் ஒரு பெட்டியை திறந்து ஒரு பந்தை மாத்திரம் எடுத்து பார்த்துவிட்டு திரும்ப வைக்கலாம். இவ்வாறு எத்தனை முறை பார்ப்பதன் மூலம் பெட்டிகளின் பெயர்களை சரியாக மாற்றலாம்.

விடைகள் –  “யோசிக்க இரு தர்க்க புதிர்கள் – TAMIL LOGIC PUZZLE”

1) தலை அலங்கோலமாக இருக்கும் முடி திருத்துபவரிடம் செல்ல வேண்டும், ஏனெனில் அவர் மற்றைய முடி திருத்துபவரின் முடியை அழகாக வெட்டியுள்ளார்.

2) ஒரே முறையில் பெட்டிகளின் பெயர்களை சரியாக மாற்றலாம். எவ்வாறெனின் ஒரு வெள்ளை நிறப் பந்தும் ஒரு கருப்பு நிறப் பந்தும் (B&W) உள்ள பெட்டியிலிருந்து ஒரு பந்தை எடுக்கவும். அப்பெட்டியின் பெயர் பிழையாக உள்ளதால் அது நீங்கள் எடுத்த பந்தின் நிறத்திற்குரிய பெட்டியாக இருக்க வேண்டும். எனவே மற்றைய இரு பெட்டிகளையும் பெயர்களை மாற்றுவதன் மூலம் மூன்றையும் சரியாக மாற்றலாம்.

உ+ம் B&W———B

SO             B————–W

AND         W————–B&W

 

One Response

Leave a Reply