இறை தூதரின் கூற்றை உண்மைபடுத்திய கிறிஸ்தவர்

இறை தூதரின் கூற்றை உண்மைபடுத்திய கிறிஸ்தவர்

%e0%ae%a4%e0%ae%9c%e0%af%8d%e0%ae%9c%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d

இறைவனின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களுக்கு ஆர்வமூட்டுவதற்கோ அச்சுறுத்துவதற்கோ நான் உங்களை ஒன்றுகூட்டவில்லை. மாறாக, (மற்றொரு தகவலைச் சொல்வதற்காகவே) உங்களை ஒன்றுகூட்டினேன். கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த தமீமுத் தாரீ எனும் ஒரு மனிதர் (என்னிடம்) வந்து வாக்குறுதிப் பிரமாணம் அளித்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்.
அவர் என்னிடம் ஒரு செய்தியைச் சொன்னார். அது(பெருங்குழப்பவாதியான) மசீஹுத் தஜ்ஜால் குறித்து நான் உங்களிடம் தெரிவித்திருந்த செய்திக்கு ஒத்திருந்தது. அவர் என்னிடம் கூறினார்:
நான் “லக்ம்” , “ஜுதாம்” ஆகிய குலங்களைச் சேர்ந்த முப்பது பேருடன் ஒரு கப்பலில் கடல் பயணம் மேற்கொண்டேன். அப்போது கடல் அலை ஒரு மாதகாலம் எங்களைக் கடலில் அலைக் கழித்துவிட்டது. பிறகு நாங்கள் கடலில் சூரியன் அஸ்தமிக்கும் (மேற்குத்) திசையில் ஒரு தீவில் ஒதுங்கினோம். பிறகு நாங்கள் சிறிய மரக்கலம் ஒன்றில் அமர்ந்து அங்கிருந்த தீவுக்குள் சென்றோம்.
Continue reading “இறை தூதரின் கூற்றை உண்மைபடுத்திய கிறிஸ்தவர்”

வாழ்க்கையின் உண்மை கதை

வாழ்க்கையின் உண்மை கதை

என் நண்பன் ஒரு நாள் என்னிடம் கூறினான். எனது மாமனார் வயதான மனிதர்.அவரது மகன்கள் தொழுகையற்றவர்கள். அவரும் தொழுகையற்றவர். அவர் பள்ளிக்குச் செல்வதில்லை, வேறு நற்காரியங்களையும் செய்வதில்லை. ஒரு நாள் நான் அவரிடம் கேட்டேன்.

உங்களுக்குத் தெரியுமா? சிங்கத்திடமிருந்து வெருண்டோடியவனைப் பற்றி. “இல்லை” என்றார் அவர். நான் ” ஓரு பையன் காட்டின் வழியே சென்று கொண்டிருந்தான். அவன் கர்ச்சனை சத்தம் கேட்டுத் திரும்பிப்பார்த்தான் . ஒரு சிங்கம் அவனை உண்பதற்கு அவனை நோக்கி வந்து கொண்டிருந்தது. சிங்கம் பின்னால் விரட்ட அவன் பயத்தால் வெருண்டோடினான். சிங்கம் அவனை அணுகும் தருவாயில்,  அருகில் ஓர் கிணற்றைக்கண்டான். கிணற்றில் பாய்ந்து அதன் கயிற்றைப் பற்றிக் கொண்டான். அதில் அவன் சற்று ஓய்வெடுக்க சிங்கத்தின் கர்ஜனையும் அடங்கியது. ஆனால் உடனே கிணற்றின் கீழால்பாம்பு சீறத்தொடங்கியது. சிங்கத்திடமிருந்தும் பாம்பிடமிருந்து எவ்வாறு தப்புவது என எண்ணும் போது. இரு எலிகள் ஒன்று வெள்ளை
மற்றது கருப்பு,  இரண்டும் கயிற்றை அரிக்க கயிறு அறும் தருவாயில், அப் பையன் கயிற்றை உலுக்கினான் எலிகள் கீழேவிழும் என்ற எண்ணத்தில். ஆனால் ஒரு முயற்சியும் பயனளிக்கவில்லை. அக் கயிறு அறும் தருவாயில், ஓர் ஆச்சரியம் !!!கயிற்றில் தேன் வழிவதைக் கண்டு அதனை சுவைத்துச் சாப்பிட்டான். அவனை சுற்றியிருந்த ஆபத்துகளான எலிகள், கர்ஜிக்கும் சிங்கம், கொடும் விஷப் பாம்பையும் மறந்தான்.” என கதையை கூறினேன். Continue reading “வாழ்க்கையின் உண்மை கதை”

அறிஞரின் உண்மையான கனவு

அறிஞரின் உண்மையான கனவு

இஸ்லாமிய அறிஞரான அப்துல்லாஹ் பின் முபாரக் அவர்கள் கஃபாவிற்கு அருகாமையில் தூங்கிக்கொண்டிருக்கும்போது ஒரு கனவு கண்டார்.
அக்கனவில் 2 மலக்குகள் வானிலிருந்து இறங்கியவாறே அவர்களுகக்கிடையில் உரையாடிக்கொண்டனர்.
மலக்கு 1: உங்களுக்கு தெரியுமா எத்தனைபேர் இம்முறை ஹஜஜிற்கு வந்துள்ளனரென்று?
மலக்கு 2: ஆறு இலட்சம் பேர்.
(அப்துல்லாஹ பின் முபாரக் அவர்களும் அந்தவருடம் ஹஜ்ஜிற்கு சென்றிருக்கின்றார்.)
மலக்கு 1: எத்தனை பேரது ஹஜ் ஒப்பக்கொள்ளப்பட்டுள்ளது?
மலக்கு 2: ஒருவரது ஹஜ்ஜாவது ஒப்புக்ககொள்ளப்பட்டிருந்தால் நான் ஆச்சர்யமடைவேன்.
அப்துல்லாஹ பின் முபாரக் அவர்கள் கவலையோடு இதனை செவியுற்றுக்கொண்டிருந்தார்.
ஏராளமானோர் பல்வேறு இன்னல்களோடு, ஆறுகளையும், மலைகளையும் கடந்து பல்லாயிரக்கனக்கான பணத்தைசெலவும் செய்கின்றார்களே என எண்ணிக்கொண்டார்.
மலக்கு 1: டமஸ்கஸில் செருப்பு தைக்கும் ஏழைத்தொழிலாளி ஒருவர் இருக்கின்றார். அவர் பெயர் அலி பின் அல்-முபீக். அவர் ஹஜ்ஜுக்கு வரவில்லை. ஆனாலும் அவரது ஹஜ் அல்லாஹ்வால் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.
அப்போது அப்துல்லாஹ் பின் முபாரக் அவர்கள் விழித்துக்கொண்டார். தான் டமஸ்கஸுக்கு சென்று அந்த செருப்பு தைக்கும் தொழிலாளியை சந்திப்பதாக முடிவுசெய்தார். Continue reading “அறிஞரின் உண்மையான கனவு”

சாமார்த்திய அரேபியர்களின் புதிர் கதை (Tamil Arabians story)

சாமார்த்திய அரேபியர்களின் புதிர் கதை (Tamil Arabians story)

Tamil good story

முன்னொரு காலத்தில் அரேபியர் ஒருவருக்கு மூன்று புதல்வர்கள் இருந்தனர். அவர் தனது மரணத்தருவாயில் தன்னுடைய அனந்தரச் சொத்தில் முதல் இரு புதல்வருக்குமே பங்கு உண்டு, கடைசி மகனுக்கு பங்கில்லை என எழுதிவிட்டு இறந்துவிட்டார். இவ் உயிலுக்கு விளக்கம் கேட்க மூவரும் இஸ்லாமிய நீதிபதியான காதியை நாடி பிரயாணம் செய்தனர்.

சாமார்த்தியசாலிகளான மூவரும் போகும் வழியில் ஏதோ மிருகம் புற்களை மேய்ந்துவிட்டுச் சென்றிருப்பதை அவதானித்தனர். அப்போது அவ்வழியே வந்த ஒருவர் தன் ஒட்டகம் காணாமற் போனதை முறையிட்டு இவர்களிடம் அதனைப் பற்றி விசாரித்தார். அதற்கு முதலாமவர் உங்கள் ஒட்டகத்திற்கு ஒரு கண் குருடா எனக் கேட்டார்? ஆம் என்றார் வழிப்போக்கர். இரண்டாமவர் உங்கள் ஒட்டகத்திற்கு வால் கட்டையா எனக் கேட்டார்?  மீண்டும் ஆம் என்றார் வழிப்போக்கர். மூன்றாம் புதல்வர் உங்கள் ஒட்டகத்தின் ஒரு கால் ஊனமா எனக் கேட்டார்? தனது ஒட்டகம் கிடைத்துவிடும் என்ற ஆனந்தத்தில் அதேதான் எனது ஒட்டகம் என்று கூறிய வழிப்போக்கர் எங்கே எனது ஒட்டகம் எனக் கேட்டார்?. மூவருமே நாங்கள் உங்கள் ஒட்டகத்தை காணவே இல்லை என்றனர். இவர்களை சந்தேகித்து இவர்களது வார்தைகளை  நம்பாத அவர் இவர்களுடன் தானும் காதியிடம் முறையிடச் சென்றார். Continue reading “சாமார்த்திய அரேபியர்களின் புதிர் கதை (Tamil Arabians story)”

நல்லதையே பேச முத்தான பொன் மொழிகள்

நல்லதையே பேச முத்தான பொன் மொழிகள்

 

  • “ஒரு மனிதனுடைய உள்ளம் உறுதியாகாத வரை அவனுடைய ஈமான் உறுதியாகாது. அவனுடைய நாவு உறுதியாகாத வரை அவனுடைய உள்ளம் உறுதியாகாது.” (ஆதாரம்: அஹ்மத்)
  •  “யார் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஈமான் கொள்கிறாரோ அவர் பேசினால் நல்லதையே பேசட்டும், இல்லையேல் மெளனமாக இருக்கட்டும்” (புஹாரி, முஸ்லிம்)
  • மனிதர்கள் அவர்களுடைய நாவுகள் சம்பாதித்துக் கொண்டவைகளுக்காகவே முகம் குப்புற நரகில் வீசப்படுவார்கள். இறைத்தூதர்(ஸல்)
  • “ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு பயந்து கொள்ளுங்கள். தெளிவான கூற்றைக் கூறுங்கள். அவன் உங்கள் செயல்களை சீர்படுத்தி உங்கள் பாவங்களையும் மன்னிப்பான். யார் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்பாடுகிறாரோ அவர் மகத்தான வெற்றியடைந்து விட்டார்” (அஹ்ஸாம்: 70- 71)
  • ‘ஒருவனிடம் கண்காணித்து எழுதக்கூடியவர் இல்லாமல் எந்த சொல்லையும் அவன் மொழிவதில்லை’. (அல்குர்ஆன் 50:18)
  • குறை சொல்லி புறம் பேசித்திரியும் ஒவ்வொருவருக்கும் கேடுதான். (அல்குர்ஆன் 104:1)
  • “நாவை விட அதிக காலம்” சிறை வைக்க வேண்டிய விடயம் உலகில் வேறெதுவுமில்லை” (அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரழி))
  • ‘உன்னுடைய நாவை விட உன்னுடைய இரு காதுகளுக்குள்ள உரிமையை ஏற்றுக்கொள். உனக்கு இரு காதுகளும் ஒரு நாவும் வழங்கப்பட்டுள்ளது ஏனெனில் நீ பேசுவதை விட அதிகமாக செவிமடுப்பதற்காகத்தான்”  அபூதர்தா (ரழி)
  • “நாவை அடக்கியாளுங்கள் -அதற்கு அதிகாரம் கொடுக்காதீர்கள். உங்கள் அதிகாரத்துக்குக் கீழே அது இயங்கட்டும். இதில்தான் வெற்றியுண்டு” இறைத்தூதர்(ஸல்)
  • “தன் நாவை ஒரு மனிதன் காத்துக் கொண்டால் அவன் மானத்தை இறைவன் காத்துக் கொள்வான்!”

Continue reading “நல்லதையே பேச முத்தான பொன் மொழிகள்”

ஃபுளைல் இப்னு இயாள் திருந்திய சம்பவம்

ஃபுளைல் இப்னு இயாள் திருந்திய சம்பவம்

அவரது ஆரம்ப காலத்தில் பிரயாணிகள் இவரின் பெயரைக் கேட்டால் அஞ்சி நடுங்குமளவுக்கு பயங்கரத்திருடராக இருந்தார்கள். ஒரு நாள் ஒரு இடத்திற்கு திருடச் சென்றார் ஃபுளைல், அங்கே ஒரு வியாபாரக் கூட்டத்தினர் இப்படிப் பேசிக் கொண்டார்கள்.

“இங்கே ஃபுளைல் என்றொரு திருடர் இருக்கின்றாராம். எவ்வளவு தான் பாதுகாப்பாக இருந்தாலும், கன நேரத்தில், திருடி விட்டுச் சென்றிடுவாராம். எனவே, ரொம்ப உஷாராக இருக்க வேண்டும். ”

தூரத்தில் நின்று இதைக் கேட்டுக் கொண்டிருந்த ஃபுளைல் திடுக்கிட்டார். வெட்கித் தலை குனிந்தார். அவர்களின் அருகே வந்த ஃபுளைல் ” நீங்கள் பயப்படவேண்டாம் இன்று இரவு முழுவதும் உங்களுக்கு நான் காவல் இருக்கின்றேன். ஃபுளைல் இடம் இருந்து உங்கள் பொருளை நான் பாதுகாக்கிறேன்” என்றார்.

வியாபாரக் கூட்டத்தினர் உறங்கினார்கள்

இரவில் விழித்துக்கொண்டிருந்த ஃபுளைல் சிந்திக்க ஆரம்பித்தார்.

“ஆம்! நாம் மாறினால் என்ன? நம் செயலைக் கண்டு மக்கள் இப்படி அச்சப்பட்டு இரவெல்லாம் தூங்காமல் நிம்மதியிழந்து துன்பப்படுகின்றார்களே! இனி நான் திருட மாட்டேன் ” என உறுதி கொண்டார்.

காலை நேரம் வியாபாரிகள் சில அன்பளிப்புகளை ஃபுளைலிடம் கொடுத்து விடைபெறுகிற போது இரவெல்லாம் கண்விழித்து எங்களின் பொருட்களையெல்லாம் பாதுகாத்த தாங்கள் யார் எனக் கேட்டனர்?

நான் தான் நேற்றிரவு நீங்கள் பயந்து கொண்டிருந்த ஃபுளைல் என்று கூறிவிட்டு, என்னை குறித்து நீங்கள் பேசியதை நான் கேட்ட போதே நான் மாற வேண்டும் என முடிவெடுத்தேன் என்றார் ஃபுளைல்.

என்றாலும் அந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க  முடியாமல் மீண்டும் திருட ஆரம்பித்தார்கள்.

இன்னொரு நாள் இரவு நேரம் ஒரு வீட்டில் சுவர் ஏறி குதித்து திருட முயன்ற போது Continue reading “ஃபுளைல் இப்னு இயாள் திருந்திய சம்பவம்”

சிறையில் யூசுப் நபியின் கனவின் விளக்கம்

சிறையில் யூசுப் நபியின் கனவின் விளக்கம்

யூசுப் (அலை) அவர்கள் எகிப்திய அரசனின் மனைவியின் சூழ்ச்சியின் காரணமாக சிறை சென்ற வேளையில் வேறு இரு வாலிபர்களும் வேறு குற்றங்களுக்காக அவர்களுடன் சிறையிலிருந்தார்கள். அவர்களில் ஒருவன் யூசுஃப் (அலை) அவர்களிடம் “நான் (திராட்சையைப் பிழிந்து) மதுரசம் தயார் செய்து கொண்டிருந்ததாக நிச்சயமாக என்னை நான் (கனவில்) கண்டேன்” என்று கூறினான். மற்றவன் என் தலையின் மீது ரொட்டியை சுமந்துக் கொண்டிருக்க அதிலிருந்து பட்சிகள் (கொத்திப்) புசிப்பதாக நிச்சயமாக என்னை நான் கனவில் கண்டேன்” என்று கூறினான். இந்த கனவிற்காக விளக்கத்தை யூசுப் (அலை) அவர்களிடத்தில் கேட்ட போது Continue reading “சிறையில் யூசுப் நபியின் கனவின் விளக்கம்”

அறிவு மேதை அலி (ரழி) தீர்த்த புதிர்

அறிவு மேதை அலி (ரழி) தீர்த்த புதிர்

அலி (ரழி)

இது ஏறத்தாள 1400 ஆண்டுகள் பழைமை வாய்ந்த புதிர். கணணியோ கல்கியுலேட்டரோ சமன்பாடுகளோ அற்ற காலம். அறிவு மேதை அலி (ரழி)யின் அறிவுத் திறமை மீது பொறாமைக் கொண்ட முஷ்ரிக் ஒருவன் அவரை சபையோர் முன் அவமானப் படுத்தும் நோக்கில் திடீரென ஒரு கடினமான புதிரை தொடுத்தான். அவன் அவரைப் பார்த்து

” ஒன்று முதல் பத்து வரை உள்ள எண்களில் எந்த எண்ணாலும் பிரிக்கும் போது மீதி வராத எண் எது?”

தற்காலத்தில் இலகுவாக 1*2*3*4*5*6*7*8*9=362880 எனலாம், ஆனால் அறிவு மேதை அலி (ரழி) அவர்களோ சட்டென இலகுவாக வேறொரு விடை அழித்தார்கள்

விடை  அறிவு மேதை அலி (ரழி) தீர்த்த புதிர் Continue reading “அறிவு மேதை அலி (ரழி) தீர்த்த புதிர்”

நன்றி மறக்காதே பொய் சொல்லாதே பெருமை அடிக்காதே

 நன்றி மறக்காதே பொய் சொல்லாதே பெருமை அடிக்காதே

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பனூ இஸ்ராயீல் மக்களில் மூன்று பேர் இருந்தனர். அவர்களில் ஒருவர் தொழு நோயாளியாகவும் மற்றொருவர் வழுக்கைத் தலையராகவும் இன்னொருவர் குருடராகவும் இருந்தனர். அல்லாஹ் அம்மூவரையும் சோதிக்க நாடினான்;எனவே, வானவர் ஒருவரை அவர்களிடம் அனுப்பினான்.
அந்த வானவர் தொழுநோயாளியிடம் வந்து, “உனக்கு மிகவும் விருப்பமானது எது?” என்று கேட்க அவர், “நல்ல நிறம்,நல்ல தோல்(தான் எனக்கு மிகவும் விருப்பமானவை). மக்கள் என்னை அருவருப்பாகக் கருதக் காரணமான இ(ந்த நோயான)து என்னைவிட்டு விலக வேண்டும்” என்று சொன்னார்.
உடனே அவ்வானவர் (இறைநாட்டப்படி) அவரைத் தம் கைகளால் தடவ அந்த அருவருப்பான நோய் அவரைவிட்டு விலகியது. மேலும், அவருக்கு நல்ல நிறமும் நல்ல தோலும் வழங்கப்பட்டன. Continue reading “நன்றி மறக்காதே பொய் சொல்லாதே பெருமை அடிக்காதே”