அந்தரேயின் சாமர்த்தியம்

, , Leave a comment

அந்தரேயின் சாமர்த்தியம்

அன்று பெளர்ணமி தினம்- வெளியே விளையாடப்போன அந்தரே  இருட்டி வெகு நேரமாகியும்
வீட்டிற்கு வரவே இல்லை. ஊர் சுற்றிவிட்டு வருவான் என்று
இருந்தாள் அவன் தாய்.

அந்தரே தினமும் அப்படித்தான். இருட்டிய பின்தான் திரும்பிவருவான்.
அவனுக்குப் புத்தி சொல்லி சொல்லி அவளுக்கு
அலுத்துவிட்டது-

‘இன்று வரட்டும். அவனுக்கு ஒரு பாடம்
படித்துக் கொடுக்கிறேன்* என்று மனதில் கறுவிக்
கொண்டாள் அவள்.

அவள் தூங்கும்வனர அந்தரே வரவில்லை.
அந்தரே வந்து போது அவள் தூங்கிக்கொண்டிருந்தாள்.

வீட்டுக்கதவைத் தட்டித் தட்டிப் பார்த்தஈன் அந்தரே.
திறக்கவே இல்லை, சத்தம் கேட்டு விழித்துக்
கொண்ட அவள் கதவைத் திறக்க விரும்பவே
இல்லை.

வெகு நேரம் கழித்து திடீரென்று யாரோ
கிணற்றில் குதிக்கும் சத்தமும் அப்படியே.
“ஜயோ-அம்மா” என்று அலறும் சத்தமும்
கேட்டது. அந்தக் குரல் அந்தரேயீன் குரல்தான்
சந்தேககமே இல்லை.

அந்தரேயின் தாய் பதறித் துடித்துக் கொண்டு
கிணற்றருகே ஓடினாள். பெளர்ணமி நிலவின்
வெளிச்சத்தில் கிணற்னறப் பார்த்தாள். எதுவும்
தெரியவில்லை, வீட்டில் இருக்கும் விளக்கைக்
கொண்டு வந்து பார்ப்பதற்காக வீட்டிற்குப் போனாள்

வீட்டில் அந்தரே தூங்கிக் கொண்டிருந்தான்.
அவனை எழுப்பினாள்…

“எப்படி வந்தாய்?…”

“நான் எப்போதோ வந்துவிட்டேன்” என்றான் அந்தரே

“அப்படியானால் கிணற்றில் விழுந்தது
யார்?—”

“யாரும் விழவில்லை. அப்படி விழுந்த சத்தமும் கேட்கவில்லையே!. ஓரு வேளை நீங்கள்
கனவு கண்டீர்களோ என்னவோ!,

பிரமித்த அவள் ஒன்றும்
பேசவில்லை.  விழும் சத்தமும்
அந்தரேயின் குரலும் கேட்டது, கிணற்னறயும்
போய் பார்த்தாள். இவையெல்லலாம் கனவா?

பேசாமல் படுக்கையில் விழுந்தாள் அவள்”.

அந்தரே தனக்குள் சிரித்துக்கொண்டிருந்தான்

கிணற்றில் கல்லை போட்டதும் கூச்சலிட்டு ஐயோ
என்று கத்தியதும் அவன்தான். அப்படி செய்த
தால்தான் கதவு அம்மாவால் திறக்க்ப்பட்டது,

Facebook Comments

 

Leave a Reply