அபூ நவாஸ்

, , Leave a comment

அபூ நவாஸ்

ஒரு முறை கலீபா அவர்கள் அபூ நாவாசின் புத்திசாலிதனத்தை சோதிக்க நாடினார். அபூநவாஸை அரச சபைக்கு அழைத்து ‘நீர் என்னை எத்தனையோ தடவை முட்டாளாக்கிவிட்டீர். அதற்கு தண்டனையாக நாளையே நாட்டைவிட்டு வெளியேற வேண்டும்.’ என கட்டளையிட்டார். அதற்கு அபூ நாவாஸ் இதுவே உங்கள் விருப்பமெனில் அப்படியே ஆகட்டும் என துக்கத்துடன் பதிலளித்தார். ‘நினைவிருக்கட்டும்! நளை முதல் உன் ஒரு காலடியேனும் இந்த மண்ணில் படக்கூடாது” என சீற்றத்துடன் கலீபா கூறினார்.

மறு நாள் காலை கலீபா அபூ நாவாஸ் ஊரை விட்டு வெளியேறிவிட்டாரா என்பதை உறுதி செய்ய தன் காவலாளர்களை அபூ நாவாஸின் வீட்டிற்கு அனுப்பினார். அபூ நவாஸோ நீச்சல் தடாகத்தில் நீந்திக் கொண்டிருந்தார். நீர் ஏன் இன்னும் நாட்டை விட்டு வெளியேரவில்லை என காவலாளிகள் கேட்டனர். அதற்கு அபூ நவாஸோ என் கால்கள் பூமியில் படாமல் நான் நீந்திக் கொண்டல்லவா இருக்கிறேன் என்றார். கலீபாவின் கடடளையோ  என் ஒரு காலடியேனும் இந்த மண்ணில் படக்கூடாது என்பது தான் என்றார். அவரோடு தர்க்கிக்க முடியாத காவலாளிகள் கலீபாவிடம் வருமாறு பணித்தனர் .

சிறிது நேரத்தின் பின் அபூ நவாஸ் அரச சபைக்கு தன் முட்டுக் கால்களால் தத்தி தத்தி வந்தார். இது என்ன கோலம் என கலீபா அவரை வினவினார். அதற்கு அபூ நவாஸ் ” கலிபா அவர்களே நீங்கள் தானே நேற்று ‘நினைவிருக்கட்டும்! நளை முதல் உன் ஒரு காலடியேனும் இந்த மண்ணில் படக்கூடாது” எனக் கூறினீர்கள், அதனால் தான் நான் என் கால்களை மண்ணில் படவிடாமல் இவ்வாறு முட்டியிட்டு வருகிறேன்” என்றார் அபூ நவாஸ். அபூ நாவாசின் புத்திசாலிதனத்தை வியந்த கலீபா அவரை மன்னித்து பரிசில்களும் கொடுத்தனுப்பினர்.

Facebook Comments

 

Leave a Reply