அறவீனமா ஞானமா?
ஒரு நாள் நபியவர்கள் தங்களது தோழர்களுடன் ஒரு ஜனாஸா ஒன்றில் கலந்து கொண்டிருக்கும் போது ஸஃது இப்னு ஸஃனா என்ற ஒரு யஹுதி வந்து நபியவர்களின் மேலாடை, சட்டையை இழுத்துத் தன்னுடைய கடனை அடைக்கும்படி கோப ஆவேசத்தில் முஹம்மதே! என்னுடைய உரிமையை நிறைவேற்றிடும் எனக் கேட்டான்.
உமர் (ரழி) அவர்கள் கோபம் கொண்டு, யஹுதியைப் பார்த்தார்கள்,
அல்லாஹ்வின் எதிரியே! நான் செவியுறும் இவ் வார்த்தையைக் கேட்டு நான் கண்டவற்றை செய்கிறாயா? இந்நபியை உண்மையைக் கொண்டு அனுப்பியவன் மீது சத்தியமாக இவர் பழிக்கப் படுவதிலிருந்து நான் எச்சரிக்கையுடன் இருக்காவிட்டால் உனது தலையை எனது வாலால் துண்டித்து இருப்பேன் எனக் கூறினார்.
நபியவர்கள் அமைதியுடன் உமரைப் பார்த்து, உமரே! நானும் இவரும் இவையல்லாதவற்றுக்கே தேவையுடைய வர்களாக இருக்கிறோம். நல்ல முறையில் கடனை நிறைவேற்ற நீர் எனக்கு கட்டளையிடுவதுடன், நலவைப் பின்பற்ற அவருக்கு கட்டளை இடுவீராக. உமரே அவருடன் சென்று அவருடைய உரிமையைக் கொடுப்பதுடன் இருபது மரைக்கால் ஈச்சம் பழத்தை அதிகமாகவும் கொடுங்கள் என நபியவர்கள் கூறினார்கள்.
உமர் (ரழி) அவர்கள் இருபது மரைக்காலை அதிகமாகக் கொடுத்த போது, உமரே! ஏன் அதிகம்? எனக் கேட்டார். உனது கோபத்திற்கு நபியவர்கள் அதிகமாகக் கொடுக்கச் சொன் னார்கள். உமரே உங்களுக்கு என்னைத் தெரியுமா? என அம்மனிதர் கேட்க, இல்லை என உமர் பதிலளித்து நீ யார்? எனவும் கேட்டார். அதற்கு நான் ஸைதுப்னு ஸஃனா எனக் கூறினார்.
ஹிப்றா? என உமர் (ரழி) அவர்கள் கேட்க, நான் ஹிப்ர் தான் எனக் கூறினேன். ஹிப்ரே நீங்கள் நபியுடன் ஏன் இவ்வாறு நடந்து கொண்டீர்கள் எனக் கேட்டார். உமரே நுபுவத்தின் அடையாளங்களில் இப்போது நான் கண்ட இரண்டைத் தவிர வேறு எதையும் நான் காணவில்லை. நபிகளாரின் ஞானத்தை அறிவீனம் முந்திடுமா? அறவீனத்தை விட ஞானமே அவர்களுக்கு அதிகரிக்குமா? என்ற இரண்டையும் அவர்களிடம் பரிசோதித்தேன்.
எனவே, உம்மை நான் சாட்சியாக வைக்கிறேன். நிச்சயமாக நான் அல்லாஹ்வை இறைவனாகவும், இஸ்லாத்தை மார்க்கமாகவும், முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை நபியாகவும் ஏற்றுக்கொண்டேன். இன்னும் நான் உம்மை சாட்சியாக வைக்கிறேன். எனது பொருட்களின் பாதியை நபியவர்களின் சமூகத்திற்கு தர்மமாக ஆக்கிவிட்டேன், எனக் கூறிவிட்டு, நபிகளாரிடம் சென்றார். வணக்கத்துக்குரியவன் அல்லாஹ் ஒருவன்தான், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும், தூதருமாவார் எனக் கூறி முஸ்லிமானார். (அல் ஹாகிம்)
Facebook Comments