இமாம் அலி (ரழி) தீர்த்த இன்னொரு வித்தியாசமான புதிர்

, , Leave a comment

இமாம் அலி (ரழி) தீர்த்த இன்னொரு வித்தியாசமான புதிர்

tamil website

ஒரு நபர்  இறக்கும் முன் அவர் தனது மூன்று ஆண் பிள்ளைகளுக்கு பின்வருமாறு உயில் எழுதினார்.

எனக்கு சொந்தமான 17 ஒட்டகங்களும் மூன்று ஆண்பிள்ளைகளிடையே பின்வருமாறு பகிரப்பட வேண்டும்.

  • எனது மூத்த மகனுக்கு சரியாக அரை பங்கு கொடுக்கப்பட வேண்டும்
  • இரண்டாவது மகனுக்கு சரியாக 1/3 பங்கு கொடுக்கப்பட வேண்டும்
  • என் இளைய மகனுக்கு சரியாக மொத்த எண்ணிக்கையில் 1/9 பங்கு கொடுக்கப்பட வேண்டும்

அவர் இறந்த பின் மக்கள் இவ் ஒட்டகங்களை பிறிக்க முடியாது திண்டாடினர்.
நாம் ஒட்டகங்களை கொல்லாது 17 ஒட்டகங்களை இவ்வாறு பிரிக்க முடியாது என்று ஒருவருக்கொருவர் கூறினார். எனினும் அறிவு மேதை இமாம்அலி (ரழி) இப் புதிரை தீர்த்து வைத்தார்.

விடை “இமாம் அலி (ரழி) தீர்த்த இன்னொரு வித்தியாசமான புதிர்”

இமாம்  அலி (ரழி) அவர்கள்  தன்னுடைய ஒட்டகத்தை அவர்களுடைய ஒட்டக்த்துடன் சேர்த்து விட்டார்கள்.
இப்போது  மொத்த ஒட்டகங்கள்  (17 +1 = 18 ) , எனவே தந்தையின் விருப்பத்தின் படி,

மூத்த மகன்                    (1 / 2 * 18) = 9   ஒட்டகங்களை பெற்றார்,
இரண்டாவது மகன்    (1 / 3 *18 )= 6  ஒட்டகங்களை பெற்றார்,
இளையவன்                   (1/ 9*18) = 2   ஒட்டகங்களை பெற்றார்,
இப்போது இவர்கள் பெற்ற மொத்த ஒட்டகங்களின்எண்ணிக்கை = 17
பின்னர் இமாம்  அலி (ரழி) அவர்கள் எஞ்சியிருந்த தன்னுடைய ஒட்டகத்தை மீளப் பெற்றார்கள்!!!

Facebook Comments

 

Leave a Reply