இமாம் ஜஃபர் ஸாதிக் (ரலி) நுணுக்கம்
ஒருநாள் இமாம் அவர்கள் நாத்தீகனான கப்பலோட்டி ஒருவனுடன் உரையாடிக் கொண்டிருக்கும்போது, ‘நீ உன் கடற் பிரயாணத்தில் எப்போதாவது கடலில் சிக்கியுள்ளாயா? என்றுவினவினார்கள். அதற்கு அவன் ஆம்! ஒரு தடவை நான் சென்ற கப்பல் புயலில் சிக்குண்டு உடைந்து, கடலில் மூழ்கி விட்டபோது கப்பலில் உள்ள அனைவரும் இறந்து விட நான்மட்டும் தத்தளித்து ஒரு மரத்துண்டை பிடித்துக் கரை சேர்ந்தேன் என்றுவிரிவாக எடுத்துரைத்தான். கப்பல் உன்னை கரை சேர்க்கும் என்று எண்ணியிருந்தாய். ஆனால் அந்தகப்பல் மூழ்கிய போது, நீ பிடித்த மரத்துண்டு உன்னை கரை சேர்க்கும் என்று எண்ணினாய். அதுவும் உன் கையைவிட்டு நீங்கிய போது, நிர்கதியாய் நீ தவித்துக் கொண்டிருந்தபோது, எவரேனும் காப்பாற்றினால் தான் உயிர் பிழைக்க இயலும் என்று நீ நம்பினாயா? என்று வினவினார்கள். அவ்விதமே நம்பினேன் என்று அவன் சொன்னான். அதற்கு அவர்கள் அவனை நோக்கி, ‘ அந் நம்பிக்கை உனக்கு எதன்மீது இருந்தது? உன்னைக் காப்பாற்றுபவர் யார்? என்று வினவினார்கள். அவன் பதில்சொல்லமுடியாமல் வாய் மூடி இருந்தான். ‘நிர்க்கதியாயிருந்த நீ உன் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்கு எதன் மீது நம்பிக்கை கொண்டாயோ, அவன் தான் அல்லாஹ்! அவனே உன்னைக் காப்பாற்றியவனாவான்’ என்று இமாம் அவர்கள் சொல்லிவாய் மூடும்முன் அவன் கலிமா சொல்லி முஸ்லிமாக மாறினான்.
Facebook Comments