உங்களால் முடியுமா?
முட்டை வியாபாரி ஒருவர் தனது மூன்று பெண் பிள்ளைகளிடம் 90 முட்டைகளை மூத்தவளிடம் 10, இரண்டாம் மகளிடம் 30, கடைசி மகளிடம் 50வும் வழங்கி சந்தையில் விற்று வரும் படி கூறினார்.ஆனால் அவர் பிள்ளைகளுக்கு சில நிபந்தனைகளை விதித்தார்.
- அனைவரும் ஒரே விலையில் முட்டைகளை விற்கவேண்டும்.
- மூவரும் முட்டைகளை விற்று பெறும் மொத்த பணம் சமமாக இருக்க வேண்டும்.மூவரும் தந்தையின் நிபந்தனையை ஏற்று அதன் படி முட்டைகளை விற்று பணம் கொண்டு வந்தனர்……. எவ்வாறு?
உங்களால் முடியுமா? Tamil puzzle answer
சந்தையில் கேள்வி குறைவாக இருந்ததால் 7 முட்டைகள் 3 ரூபா வீதம் விற்கப்பட்டன.
மூத்தவள் 7 முட்டைகளை விற்று 3 ரூபாவும்
இரண்டாவது மகள் 28 முட்டைகளை விற்று 12 ரூபாவும்
மூன்றாவது மகள் 49 முட்டைகளை விற்று 21 ரூபாவும் பெறுகின்றனர்.
எஞ்சிய முட்டைகளுக்கு கேள்வி அதிகரிக்க ஒரு முட்டையை 9 ரூபா வீதம் விற்கின்றனர்.
மூத்தவள் 3 முட்டைகளை விற்று 27 ரூபாவும்
இரண்டாவது மகள் 2 முட்டைகளை விற்று 18 ரூபாவும்
மூன்றாவது மகள் 1 முட்டையை விற்று 9 ரூபாவும் பெறுகின்றனர்.
வீடு செல்லும் போது
மூத்தவள் 3+27 = 30/=
இரண்டாவது மகள் 12+18 =30/=
மூன்றாவது மகள் 21+9 = 30/=
Facebook Comments