கணனியின் வரலாறு (History of the Computer) -1

, , 25 Comments

கணனியின் வரலாறு (History of the Computer)

இன்று கணினி அனைவராலும் அதிகளவில் பயன்படுத்தும் சாதனமாக மாறியுள்ளது. எனினும் கணினி பிரபல்யமடைய மிக நீண்ட காலம் தேவைப்பட்டது. தகவல் தொடர்பாடல் (\கணனியின் வரலாறு) வரலாற்றுக்கால கட்டங்களை நான்காக வகைப்படுத்துவர்.

  • இயந்திர யுகத்திற்கு முன்னைய காலம் (1450க்கு முதல்)
  • இயந்திர யுகம் (1450 – 1840)
  • மின்னியல் இயந்திர யுகம் (1840 – 1940)
  • இலத்திரனியல் யுகம் (1940 முதல்)

 

v  ஆரம்பத்தில் மனிதன் கூட்டல், கழித்தல் வேலைகளை செய்வதற்காக தனது விரல்களை பயனபடுத்தினான்.

v  கி.மு 3000 ஆண்டுகளுக்கு முன்னர் மனிதன் எண்சட்டத்தை (Abacus) கண்டுபிடித்தான். இதுவே முதலாவது கணனியாகும். இவ்வாறான எண்சட்டங்கள் பல்லாயிரக்கணக்கான நாடுகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

v  1617ஆம் ஆண்டில் ஸ்கொட்லாந்து நாட்டை சேர்ந்த John Napier என்பவரால் மடக்கை கோட்பாடு (Logarithms) உலகுக்கு அறிமுகம் செய்யப்பட்டது. மடக்கை பெறுமானங்கள் கொண்ட சட்டகங்கள் அமைக்கப்பட்டு அதனூடு கணித்தல்கள்   மேற்கொள்ளப்பட்டன. இச்சட்டகங்கள் நேப்பியரின் சட்டகங்கள் (Napier’s bones)  என அழைக்கப்பட்டன.

v  1642ஆம் ஆண்டில் பிரான்ஸ் நாட்டின் கணிதவியலாளரான பிளேயிஸ் பஸ்கால் (Blaise Pascal) என்பவரால் கூட்டற்பொறி கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வுபகரணம் பஸ்காலின் என அழைக்கப்பட்டது.

v  1674ஆம் ஆண்டில் இவ்வுபகரணம் ஜேர்மன் நாட்டை சேர்ந்த கணிதவியலாளரான கோட்பிரட் வில்லியம் (Gottfried Wilhelm)  மேம்படுத்தப்பட்டது. கூட்டல், கழித்தல் என்பவற்றோடு பெருக்கல் சேர்க்கப்பட்டது. இப்பொறி படிக்கணக்கிடலி (Step Reckon)

v  1822 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் கணிதவியலாளரான சார்ல்ஸ் பாபேஜ் (Charles Babbage)    என்பவரால் பொறிமுறைக் கணித்தலுக்கான மாதிரி உரு அமைக்கப்பட்டது. அது வித்தியாசப் பொறி (Different Engine) என அழைக்கப்பட்டது. 1833 ஆம் ஆண்டு பகுப்பு பொறி (Analytical Engine)  உருவாக்கப்பட்டது. பிற்காலத்தில் உருவான கணினிக் கட்டமைப்புக்கு இதுவே பெரும் துணையாக அமைந்தது. எனவே தான் சார்ல்ஸ் பாபேஜ் கணினியின் தந்தையாக கருதப்படுகிறார். இவரின் நண்பியான Ada Augusta Lovelace இவ்வியந்திரத்திற்கான நிகழ்ச்சி திட்டங்களை தயாரிக்க முயற்சித்தார். இவரே முதல் கணினி செயல் நிரலர் (First Computer Programmer)  என கருதப்படுகிறார். இவரை கௌரவிக்கும் முகமாகவே இராணுவ கணினி மொழிக்கு Ada பெயரிடப்பட்டுள்ளது.

v  1880ஆம் ஆண்டு ஜோசப் ஜக்குவார்ட்டின் (Joseph Jacquard) துளையட்டை (Punch Card)  எண்ணக்கரு வெளியானது.

v  1890ஆம் ஆண்டு  ஹேர்மன் ஹோலோர்த் (Herman Hollerith) அமெரிக்க சனத்தொகை கணிப்பீட்டை Punch Card யை பயன்படுத்தி வெற்றிகரமாக மேற்கொண்டார். இவரே இன்றைய IBM (International Business Machines) உருவாக காரணமாக அமைந்தார்.

Facebook Comments

 

25 Responses

Leave a Reply