கப்பல் சந்திப்பு புதிர்

, , 2 Comments

கப்பல் சந்திப்பு புதிர்

கப்பல் சந்திப்பு புதிர்
கப்பல் சந்திப்பு புதிர்

கொழும்பு துறைமுகத்திலிருந்து தினமும் பகல் 12 மணிக்கு வெளியாகும் கப்பல் சரியாக 7 நாட்களின் பின் மஸ்கத் துறைமுகத்தினை சென்றடைகிறது. இதே மாதிரி மஸ்கத் துறைமுகத்திலிருந்தும் தினமும் ஒரு கப்பல் பகல் 12 மணிக்கு வெளியாகி சரியாக 7 நாட்களின் பின் கொழும்பு துறைமுகத்தை வந்தடைகிறது. இக்கப்பல்கள் நேர்கோட்டுப் பாதையில் பிரயாணம் செய்யும் எனில் இன்று பகல் 12 மணிக்கு கொழும்பிலிருந்து வெளியாகும் கப்பல் மஸ்கத் துறைமுகத்திலிருந்து வரும் எத்தனை கப்பல்களை சந்திக்கும்?  விடை ஏழு இல்லை!

சரியான விடை கப்பல் சந்திப்பு புதிர்

கப்பல் சந்திப்பு புதிர்

 

மேலுள்ள படம் கப்பல் பிரயாணத்தை இலகுவாக விளக்கும்.  கொழும்பு துறைமுகத்திலிருந்து கப்பல் வெளியாகும் போது இன்னொரு கப்பல் துறைமுகத்தை வந்தடையும். அவ்வாறே 7 ஆம் நாள் மஸ்கத் துறைமுகத்தை வந்தடையும் போதும் இன்னொரு கப்பல் வெளியாகும். எனவே  13 கப்பல்களை இடை நடுவிலும்  2 கப்பல்களை துறைமுகத்திலும் சேர்த்து மொத்தமாக 15 கப்பல்களை சந்திக்கும் என்பதை இப்படத்தில் நிழற்றிய புள்ளிகள் மூலம் அறியலாம்.

Facebook Comments

 

2 Responses

Leave a Reply