தங்கக் குவியல் புதிர்
ஒரு அரசன் இறக்கும் போது தன் மூன்று பிள்ளைகளுக்கு முப்பது தங்கக் குடங்களில் தங்கக் காசுகளையும் விட்டுச் சென்றான். அதில் முதல் பத்து குடங்களில் தங்கக் காசுகள் முழுமையாகவும் மற்ற பத்து குடங்களில் அரைவாசியாகவும் மீதி பத்து குடங்கள் வெறும் தங்க குடங்களாவும் இருந்தன. ஒரு குடத்திலிருந்து இன்னொரு குடத்திற்கு தங்கக் காசுகளை மாற்ற முடியாதெனில் மூவருக்கும் எவ்வாறு தங்கக் காசுகளையும் தங்கக் குடங்களையும் சமமாக பகிரலாம்.
விடை தங்கக் குவியல் புதிர்
மூவருக்கும் தலா பத்து தங்கக் குடங்களும் ஐந்து குட தங்கக் காசுகளும் கிடைக்க வேண்டும். எனவே
முதலாமவனுக்கு பத்து அரைவாசி தங்கக் காசு குடங்களும் ஏனைய இருவருக்கும் ஐந்து முழு தங்கக் காசு குடங்களும் ஐந்து வெற்று தங்கக் குடங்களுமாக பகிரப்பட வேண்டும்
Facebook Comments