தமிழ் புதிர்கள் – TAMIL PUZZLES

, , 3 Comments

தமிழ் புதிர்கள் –  TAMIL PUZZLES

  1.  ஒரு தந்தைக்கு நான்கு பெண் பிள்ளைகள் இருந்தனர். நான்கு மகள்களில்  ஒவ்வொரு மகளுக்கும் ஒவ்வொரு சகோதரர் இருந்தார் எனின் அவருக்கு மொத்தம் எத்தனை பிள்ளைகள்.
  2. மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒருவனுக்கு  அதனை நிறைவேற்ற மூன்று முறைகளில் ஏதேனும் முறை  ஒன்றை தேர்ந்தெடுக்குமாறு கூறப்பட்டது. முதலாவது தூக்குத் தண்டனை, இரண்டாவது விஷ ஊசி ஏற்றப்படல், மூன்றாவது மூன்று வருடம் உணவு கொடுக்கப்படாத சிங்கத்தின் கூண்டினுல் இடப்படல். இவற்றில் எம்முறையை  தேர்ந்தெடுப்பதன் மூலம் அவன் மரண்தண்டனையிலிருந்து விடுபடலாம்.
  3. ” தமிழ் அரிச்சுவடி” யில் எத்தனை எழுத்துகள் உள்ளன.
  4. ஒரு மனிதன் ஞாயிறன்று காலையில் இறந்துக்  கிடந்தான். அவன் மனைவி உடனே காவல் துறைக்கு (பொலிசிற்கு) அறிவித்தாள். பொலிசார் வீட்டில் வேலை செய்பவர்களை விசாரித்தனர். அதன் போது அவர்கள் பின்வருமாறு பதிலளித்தனர். சமையல்காரர்- “நான் சமைத்துக் கொண்டிருந்தேன்” , தோட்டக்காரன்-” நான் பயிர்ளை நட்டுக் கொண்டிருந்தேன்”, வேலைக்காரன்-” நான் துணி துவைத்தேன்”, பணிப்பெண்-” நான் இன்றைய அஞ்சல்களை எடுத்துக் கொண்டிருந்தேன்”. இப் புதிரில் யார் கொலையாளி? ஏன்?
  5. ஜோனின் அம்மாவுக்கு மூன்று ஆண் பிள்ளைகள். மூத்தவனின் பெயர் ஜனவரி, இரண்டாமவனின் பெயர் பெப்ரவரி. இளையவனின் பெயர் என்னவாக இருக்கலாம்?

விடை தமிழ் புதிர்கள் –  TAMIL PUZZLES

 

  1. ஐந்து பிள்ளைகள்
  2. மூன்றாவது முறையை  தேர்ந்தெடுப்பதன் மூலம் அவன் மரண்தண்டனையிலிருந்து விடுபடலாம். ஏனெனில் மூன்று வருடம் உணவு கொடுக்கப்படாத சிங்கம் எப்போதோ இறந்திருக்கும்.
  3. ஒன்பது எழுத்துகள் உள்ளன. அதாவது ” தமிழ் அரிச்சுவடி”  எனும் சொல்லில் ஒன்பது எழுத்துகள் உள்ளன.
  4. பணிப் பெண்ணே கொலையாளி, ஏனெனில் ஞாயிறன்று அஞ்சல் வராது. எனவே அவள் பொய் சொல்கிறாள்.
  5. ஜோன்!!!!!!!!!

Facebook Comments

 

3 Responses

Leave a Reply