தரவுத்தொடர்பாடல் (Data Communication) – part 1

, , Leave a comment

தரவுத்தொடர்பாடல் (Data Communication)

தரவுகளை ஓர் இடத்திலிருந்து வேறோர் இடத்திற்கு ஊடுகடத்தல் தரவுத்தொடர்பாடல் எனப்படும். அல்லது துவித இரகசிய மொழியாக்கப்பட்ட தரவுகளை ஓர் இடத்திலிருந்து வேறோர் இடத்திற்கு அனுப்புவது தரவுத்தொடர்பாடல் எனப்படும்.

தரவுத்தொடர்பாடல் (Data Communication)

  1. தரவு முலம் (Sender / Source ): ஊடுகடத்த தேவையான தரவு உண்டாக்கப்படும் இடம்
  2.  தரவுத் தொடர்பாடல் ஊடகம்(Data Communication Media):     தரவைப்பெறுநறுக்கு கொண்டு செல்லப்பயன்படும் சாதனம்.
  3. தரவு பெறுநர் (Receiver / Sink): இறுதியாக தரவைப் பெறுபவர்.

 

மின்னணுசமிக்ஞைகளின்செலுத்துகை (Transmission of electronic signals)

கணிப்பீட்டு செய்முறைகளுக்கு இடையே செலுத்தப்பட்ட ஒரு நிகழ்ச்சி செய்தி அல்லது தரவுக்கட்டமைப்பு என்பதே சமிக்ஞையாகும். இவை இரு வகைப்படும்.

  ஒப்புமை சமிக்ஞை Analog Signals

எங்கள் வாழ்வில் ஒவ்வொரு நாளும் எதிர்கொள்வதாகும். பேசுதல் என்பது   தொலைபேசி கம்பியை உபயோகிக்கும் ஓர் ஒப்புமை சமிக்ஞையாகும். ஒப்புமை சமிக்ஞைகளில் சமிக்ஞை உரப்பு நேரத்துடன் மெதுவாக மாறுபடும். பொது மக்களின் தொலைப்பேசிச்சேவை ஒப்புமை சமிக்ஞைக்கு ஆதரமாக அமைந்துள்ளது

    எண்ணக சமிக்ஞை Digital Signal

எண்ணக சமிக்ஞைகள் நவீன கால கணனிகளின் மொழியாகும். எண்ணக சமிக்ஞைகள் இரு நிலைகளில் மாத்திரம் அமைந்துள்ளன. இவைகள் திறந்த (on) அல்லது மூடியது (off) ஆக முறையே 1 அல்லது 0 எனப்படும்.

v  ஒளி ஆளிகள் – திறந்த (on) அல்லது மூடியது (off)

v கதவுகள் – Open  அல்லது   Closed

 

தரவு செலுத்துகை. (Data Transmission)      

தரவு செலுத்துகை என்பது தொடர்பாடல் ஊடகங்களின் வழியாக இரு தனங்களுக்கிடையே தரவினை கொண்டு செல்வதாகும். தரவு செலுத்துகைக்கு ஒர் ஊடகம் தேவையாகும்.

செலுத்துகை ஊடகங்கள்(TransmissionMedia)

செலுத்துகை ஊடகங்களானவை சமிக்ஞைகளை ஓரு தானத்தில் இருந்து மற்றொரு தானத்திற்கு கடத்துபவையாகும். பல்வேறு வகையான செலுத்துகை ஊடகங்கள் உள்ளன.

  1. வழிப்படுத்தப்பட்ட ஊடகங்கள்/ எல்லைப்படுத்தப்பட்ட ஊடகங்கள்  (கம்பிகள்/வடங்கள் – செப்புகள், ஒளியிழை நார்கள்)
  2. வழிப்படுத்தப்படாத ஊடகங்கள்/ எல்லைப்படுத்தப்படாத ஊடகங்கள்     (கம்பியில்லா – நுண்ணலை, வானொலி, செய்மதி, செல்லிடத் தொலைபேசி)

 

 

 

 

Facebook Comments

 

Leave a Reply