தரவு ஊடுகடத்தும் முறைகள் (Data Transmission Types)

, , 1 Comment

தரவு ஊடுகடத்தும் முறைகள் (Data Transmission Types)

தரவு ஊடுகடத்தல் இரு பிரதானமுறையில் நடைபெறலாம்.

  1. தொடர் தரவு ஊடுகடத்தல் (Serial Data Transmission): இங்கு தரவுகள் ஒன்றன் பின் ஒன்று வீதம் ஊடுகடத்தப்படுகின்றன. கணினி வலையமைப்பில் இவ்வாறு தரவுகள் பிட்(bit)களாக ஊடுகடத்தப்படும்.
  2. சமாந்திர தரவு ஊடுகடத்தல்  (Parallel Data Transmission):     ஓரே தடவையில் அதிக எண்ணிக்கையிலான பிட்கள்   ஊடுகடத்தப்படும்.   இதற்கு  குறைந்தப்பட்சம் 8 கம்பிகளையேனும் பயன்படுத்துவது வழக்கம்.

தரவு ஊடுகடத்தல் கதி( Data Transmission Speed)

பிட்களை (bit) கொண்டு தரவு ஊடுகடத்தலின் கதியை அளப்பதற்கு ஒரு செக்கனில் ஊடுகடத்தப்படும் பிட்களின் எண்ணிக்கை (bit per second –bps) கருத்தில் கொள்ளப்படும். Kbps, Mbps, Gbps அலகுகளும் தரவு ஊடுகடத்தலின் கதியை அளப்பதற்கு பயன்படுத்தப்படும்.

 

தரவு ஊடுகடத்தல் வழிமுறைகள் ( Data Transmission Modes)

தரவு ஊடுகடத்தல் பிரதானமாக மூன்று வழிகளில் நடைபெறும்.

  1. ஒற்றை வழிப்போக்கு (Simplex) : தரவு ஒரு திசையில் மாத்திரம் செல்கிறது. மற்றைய திசையில் தரவு ஊடுகடத்தப்பட எவ்வித வாய்ப்பும் இல்லை
  2. அரை இருவழிப்போக்கு(Half-Duplex): இரு திசைகளிலும் தரவுகளை ஊடுகடத்துவதற்காக இருக்கின்றபோதிலும் ஒரு தடவையில் ஒரு திசையில் மாத்திரம் ஊடுகடத்தத்தக்க தரவு ஊடுகடத்தல் முறை அரை இருவழிப்போக்கு தரவு ஊடுகடத்தல் எனப்படும்
  3. இருவழிப்போக்கு (Full Duplex):   ஒரே சந்தர்ப்பத்தில் இரு திசைகளிலும் தரவு ஊடுகடத்தல் நடைபெறத்தக்க தரவு ஊடுகடத்தல் முறை இருவழிப்போக்கு தரவு ஊடுகடத்தல் எனப்படும்

 

 .

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Facebook Comments

 

One Response

Leave a Reply