தரவு தகவல் செய்முறை
தரவு, தகவல், செய்முறைக்கிடையிலான வித்தியாசங்களை வேறுபாடுத்திகாட்டல். (Distinguish the difference between data information and data processing)
தரவு
தெளிவான அர்த்தமற்ற மற்றும் ஒழுங்கற்ற விடயங்களே தரவுகளாகும்.
தரவுகள் அமைந்துள்ள முறைகள்.
- எழுத்து வடிவில் (எழுத்துக்கள் – அ,ஆ, இலக்கங்கள் -1,2, குறியீடுகள் – +,*,/)
- கட்புல வடிவில்
- செவிபுல வடிவில்
தரவுகளை வகைப்படுத்தல்.
- பண்பு – எண்ணிக்கை அளவில் முன்வைக்க முடியதவை (நிறம், வடிவம்,சத்தம்)
- அளவு – எண்ணிக்கை அளவில் முன்வைக்க கூடியவை.
தரவின் இயல்புகள்.
- சேகரித்து சேமித்து வைக்க முடியும்
- சேமிப்பு ஊடகமொன்றிலிருந்து பெற்றுக்கொள்ள முடியும்.
- கலந்துறையாட முடியும்
- செய்முறைக்கு உட்படுத்தமுடியும்
தகவல்
கருத்துள்ளவாறு ஒழுங்கு செய்து அமைக்கப்பட்ட தரவுகள் தகவலாகும்.
தகவலின் தரத்தை மேம்படுத்த உதவும் காரணிகள்.
- பொருத்தம்/ தொடர்பு (relevance)
- தெளிவு (clarity)
- திருத்தம் (accuracy)
- பூர்த்தி (completeness)
- தொடர்பு கொள்ளகூடிய தன்மை (make of communication)
- நேர வரையறை (Time Horizon)
தகவலின் பண்புகள். (Properties of Information)
- திருத்தம் (Accuracy)
- மாதிரி (Format)
- அதிர்வெண் (Frequency)
- அகலம் (Breadth)
- உற்பத்தி (Origin)
- நேர வரையறை (Time Horizon)
திருத்தம் (Accuracy)
தகவல் சரி அல்லது தவறு/திருத்தம் அல்லது திருத்தமின்மை
மாதிரி (Format)
இது பண்புரீதியாக, அளவுகள், எண் முறைகள் மற்றும் வரைபட வடிவிலும் சுருக்கமகவும் விரிவாகவும் விபரிக்கப்படும்.
அதிர்வெண் (Frequency)
இது எவ்வளவு காலத்தில் தகவல் தேவைப்படுகின்றது, சேகரிக்கப்படுகின்றது அல்லது தயாரிக்கப்படுகின்றது என்பதன் அளவாகும்.
அகலம் (Breadth)
இது தகவலின் நோக்கத்தை வரையறுக்கும்.
உற்பத்தி (Origin)
தகவல் நிறுவனத்திற்கு உள்ளக அல்லது வெளியக வளங்களிலிருந்து பெறப்படலாம்.
நேர வரையறை (Time Horizon)
தகவல் கடந்த கால,தற்போதைய நிகழ்வு அல்லது எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் நிகழ்வுகளை நோக்கியிருக்கும்.
தரவு தகவல்களுக்கிடையிலான வேறுபாடுகள்.
அர்த்தமற்ற தரவுகள் செய்முறைக்கு உட்படுத்தப்படுவதன் மூலம் தகவல்கள் பெறப்படுகின்றன.
செய்முறை
தரவுகளை அர்த்தமுள்ளதாக மாற்றும் செயற்பாடு செய்முறை எனப்படும். பெற்றுக் கொள்ளல், பதிவு செய்தல், ஒழுங்கமைத்தல், மீளப்பெறல்.
Facebook Comments