நவீன கணனியின் வகைகள் (NEW TYPES OF THE COMPUTER)

, , Leave a comment

 

சில தசாப்தங்களுக்கு முன் இவ் வகையான கணனிகளே வெளிவந்தன.தற்காலத்தில் கணனிகள் பல புது வகையான வடிவில் வெளிவருகின்றன. அவற்றை பின்வருமாரு வகைப்படுத்தலாம்.

  • Desktops
  • SFF
  • All-in-Ones
  • Laptops
  • 2-in-1s
  • Netbook
  • Tablet

 

Desktop

நாம் எல்லோரும் அறிந்த வழமையான கணனி இது. இங்கு  CPU மையச் செயற்பாட்டுத் தொகுதியும் display/Monitor தனித்தனியாகவும் இருக்கும்.

SFF-Small-form factor

இவை டெஸ்க்டொப்பை விட அளவில் சிறியதாகும். எனவே குறைந்த இடமே இதற்கு தேவை படுவதுடன் Desktop கணனிகளுக்கு நிகரானதாகும்.

DESKTOP VS SFF

All-in-Ones

அப்பிள் மெக் கணனிகள் இவ் வகையில் பிரபல்யமானதாகும். இதுவும் ஒரு வகையான Desktop கணனியாகும். தறகாலங்களில் இவை Touch Screen உடன் வருவதால் All-in-One கணனிகளை keyboard, mouse இன்றியே இயக்க முடியும். பெயருக்கு ஏற்ப இவை குறைந்த இடத்தை உபயோகிப்பதால் காரியாலங்களில் அதிகாமாக பயன்படுத்தப்படுகிறது.

Laptops

Laptop மடிக் கணனிகள் அதிகமாக புழக்கத்தில் உள்ளவையாகும். இதற்கான பிரதான காரணம் இவை டெஸ்க்டொப் கணனிகளின் திறனுடன் செயற்படுவதுடன் கையுடன் எடுத்துச் சென்று பயன்படுத்தக் கூடியதாக இருப்பதாகும்.

 

2-in-1s

டூ இன் வன் கணனிகள் அளவில் லெப்டொப்பை விட சிறியதாகும். இவ்வகையான கணனிகளை இரண்டாக பிரிக்க கூடியதாக இருக்கும். அதாவது கீபோடையும் ஸ்க்ரீனையும் வேராக்கலாம். டச் ஸ்க்ரீன் தொழில் நுட்பத்துடன் கூடிய இவற்றை TABLET ஆகவே LAPTOP ஆகவோ பயன்படுத்தலாம்.

 

Netbook

இவை பருமனில் சிறிய திறனில் குறைந்த மடிக் கணனிகளாகும். குறைந்த விலையுடன் கூடிய இவை பள்ளி மாணவர்களுக்கு உகந்ததாகும்.

 

Tablet

டெப்லட் கணனிகள் கீபோட் அற்ற கணனிகளாகும். ஸ்மார்ட் போனுககு ஒத்த இவை பருமனில் பெரியதாகும்.

Facebook Comments

 

Leave a Reply