தோள் கொடுத்து தூக்கிவிட்டாய்
வார்த்தைகளால் அரவணைத்தாய்
அன்புக்கு அர்த்தம் புரியவைத்தாய்
அழைக்காமலே எனக்காக பணிபுரிந்தாய்
நீ என் அருகில் இருந்தபோது
நாட்கள் நகர்ந்த விதம்………………….
இன்று வெகு தூரத்தில் நீ
விழும் முன் என்னை தாங்க
உன் தோள்கள் இல்லை
என்னை ஆறுதல் படுத்த
உன் வார்த்தைகள் இல்லை
அழைத்தாழும் வந்துதவும் துரத்தில்
நீ இல்லை
என் முகம் நீயும் உன் முகம்
நானும் பார்க்க முடியல
நம்லாஸ்
Facebook Comments