புத்தகப்புழு புதிர்

, , Leave a comment

புத்தகப்புழு புதிர்

ஒரு புத்தகப்புழு மூன்று பாகங்களை கொண்ட ஒரே தடிப்புடைய மூன்று புத்தகங்களை ஊடுறுவியது. அதன் பிரயாணம் முதலாம் பாகத்தின் ஆரம்ப அட்டை பக்கத்தில் தொடங்கி மூன்றாம் பாகத்தின் இறுதி அட்டை பக்கத்தில் முடிந்தது. ஒவ்வொரு புத்தகமும் 10 அலகுகள் தடிப்புடையது எனில் புத்தகப்புழு கடந்து சென்ற மொத்த தூரம் எவ்வளவு?

30 அலகுகள் என்பது தவறான விடை.

சரியான விடைbookworm

10 அலகுகள் ஆகும். மேலே உள்ள படத்தை உற்று நோக்கினால் அதன் விடை புரியும். முதலாம் பாகத்தின் அட்டை பக்கத்தில் தொடங்கி மூன்றாம் பாகத்தின் அட்டை பக்கத்தில் வெளியேற புத்தகப்புழு பாகம் இரண்டை மட்டுமே கடக்கும்.

Facebook Comments

 

Leave a Reply