பொன்மொழிகள்

பொன்மொழிகள்

 

  • (உண்மையான) விசுவாசிகள் யாரென்றால், அல்லாஹ் என்று (அவன் பெயர் அவர்கள் முன்) கூறப்பட்டால், அவர்களுடைய இதயங்கள் பயந்து நடுங்கிவிடும். மேலும் அவனுடைய வசனங்கள் அவர்களுக்கு ஓதிக்காண்பிக்கப்பட்டால் அவை அவர்களுக்கு ஈமானை அதிகப்படுத்தும். அவர்கள் தங்கள் இரட்சகனின் மீது தங்கள் காரியங்களை முழுமையாக ஒப்படைப்பார்கள்..

    அல்-குர்ஆன் (8-2)

     

  • எவனுடைய நன்மையின் எடை இலேசாகி பாவ எடை கனத்து விட்டதோ, அவன் தங்குமிடம் ஹாவியாதான். அந்த ஹாவியா இன்னதென்று நபியே! நீங்கள் அறிவீர்களா? அதுதான் சுட்டெரிக்கும் நரக நெருப்பாகும்.

    அல்-குர்ஆன் (101 – 8, 9, 10, 11)

  • இன்னும் அர்ரஹ்மானுடைய அடியார்கள் (யாரென்றால்) அவர்கள்தாம் பூமியில் பணிவுடன் நடப்பவர்கள்; மூடர்கள் அவர்களுடன் பேசி(வாதா)ட முற்பட்டால் “ஸலாம்” (சாந்தியுண்டாகட்டும் என்று) சொல்லி (விலகிப் போய்) விடுவார்கள்.   

    அல்-குர்ஆன் (25:63)


  • அன்றியும், அவர்கள் பொய் சாட்சி சொல்லமாட்டார்கள்; மேலும், அவர்கள் வீணான காரிய(ம் நடக்கும் இட)த்தின் பக்கம் செல்வார்களாயின் கண்ணியமானவராக (ஒதுங்கிச்) சென்றுவிடுவார்கள்.

    அல்-குர்ஆன் (25:72)

  • உன் நடையில் (மிக வேகமோ, அதிக சாவதானமோ இல்லாமல்) நடுத்தரத்தை மேற்கொள்; உன் குரலையும் தாழ்த்திக் கொள்; குரல்களிலெல்லாம் வெறுக்கத்தக்கது நிச்சயமாக கழுதையின் குரலேயாகும்.

    அல்-குர்ஆன் (31:19)

  • நீர் கூறும்: “மெய்யாக என்னுடைய தொழுகையும், என்னுடைய குர்பானியும், என்னுடைய வாழ்வும், என்னுடைய மரணமும் எல்லாமே அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே சொந்தமாகும்.

    அல்-குர்ஆன் (6-162)

  • கருஞ்சீரக விதையில் ‘சாமைத்’(‘மரணம்’) தவிர மற்ற எல்லா நோய்களுக்கும் நிவாரணம் உள்ளது’

                                                                                                                                                               இறைத்தூதர் முஹம்மத் (ஸல்)

  • ஆதத்துடைய மகனுக்கு தங்க வயல் ஒன்றைத் தந்தால் அவன் இன்னும் ஒன்றைப் பெற்றிட அவாவுவான். இரண்டாவது ஒன்றைக் கொடுத்தால் அவன் மூன்றாவது ஒன்றை நாடுவான். அவன் உடல் மண்ணில் அடங்கி (மக்கிப்) போகும்வரை அவனது ஆசைகள் திருப்தி அடைவதில்லை. அல்லாஹ்வின் பக்கம் திரும்பி மன்னிக்கக் கோருவோனது மன்றாட்டத்தை அல்லாஹ் நிச்சயமாக ஏற்றுக் கொள்வான்.

    (புஹாரி)

  • ஆதத்தின் மகன் முதிர்ந்த வயதை அடைகிறான். எனினும் இரண்டு குணங்கள் அவனை விட்டும் அகலுவதில்லை. ஒன்று பேராசை, இரண்டு முடிவற்ற நிலையில் திரும்பத்திரும்ப வந்து கொண்டிருக்கும் (புதுப்புது) ஆசைகள்.

                                                                                                                                                               இறைத்தூதர் முஹம்மத் (ஸல்)

  • “பூமியிலுள்ளவர்கள் மீது நீங்கள் இரக்கங் காட்டுங்கள்,
    வானத்திலுள்ளவர்கள் உங்கள் மீது இரக்கங் காட்டுவார்கள்.”.

                                                                                                                                                               இறைத்தூதர் முஹம்மத் (ஸல்)

  • கல்வி மக்களிடமிருந்து மறைந்து விடுவதும் அறியாமை நிலைத்து விடுவதும் மது அருந்தப் படுவதும் வெளிப்படையாய் விபசாரம் நடப்பதும் மறுமை நாளின் அடையாளங்களில் சிலவாகும்

                                                                                                                                                               இறைத்தூதர் முஹம்மத் (ஸல்)

  • அறிவுள்ளவனின் நாவு அவன் இதயத்தில் இருக்கும். அறிவற்றவனின் இதயம் அவன் வாயில் இருக்கும்.

                                                                                                                                                               ஹஜ்ரத் அலி (ரலி)

  • பொருளில் புதியது நல்லது. நட்பில் பழையது நல்லது

                                                                                                                                                               ஹஜ்ரத் அலி (ரலி)

  • ஒவ்வொரு பொருளுக்கும் ஸகாத் உண்டு. அறிவின் ஸகாத் மடையர்களின் பேச்சைக் கேட்டுப் பொறுமையாய் இருப்பது.

                                                                                                                                                               ஹஜ்ரத் அலி (ரலி)

  • ”இந்த சமுதாயத்தின் சீர்திருத்தம் யகீன் [இறையச்சம்] மற்றும் உலகப் பற்றற்ற தன்மையைக் கொண்டு ஆரம்பமானது . இந்த சமுதாயத்தின் சீரழிவு , கருமித்தனம் , உலக பேராசைகளைக் கொண்டு ஆரம்பமாகும்”

                                                                                                                                                               இறைத்தூதர் முஹம்மத் (ஸல்)

  • அன்னையரைப் புண்படுத்தவது, (அடுத்தவருக்குத் தரவேண்டியதைத்) தர மறுப்பது, (அடுத்தவருக்கு உரியதைத்) தருமாறு கேட்பது, பெண் சிசுக்களை உயிருடன் புதைப்பது ஆகியவற்றை அல்லாஹ் தடை செய்துள்ளான். மேலும், (தேவையின்றி) அதிகமாகப் பேசுவது, அதிகமாகக் (கேள்வி, அல்லது யாசகம்) கேட்பது, செல்வத்தை வீணாக்குவது ஆகியவற்றை அல்லாஹ் வெறுத்துள்ளான்.

                                                                                                                                                               இறைத்தூதர் முஹம்மத் (ஸல்)

  • தம் வாழ்வாதாரம் (ரிஸ்க்) விசாலமாக்கப்படுவதும் வாழ்நாள் நீட்டிக்கப்படுவதும் யாருக்கு மகிழ்ச்சி அளிக்குமோ அவர் தம் உறவைப் பேணி வாழட்டும்

                                                                                                                                                               இறைத்தூதர் முஹம்மத் (ஸல்)

  • ஒரு முஸ்லிம் மரம் ஒன்றை நட்டு அதிலிருந்து ஒரு மனிதனோ அல்லது (மற்ற) உயிரினமோ உண்டால் (அதன் காரணத்தால்) ஒரு தர்மம் செய்ததற்கான பிரதிபலன் அவருக்குக் கிடைக்காமல் இருப்பதில்லை.

                                                                                                                                                               இறைத்தூதர் முஹம்மத் (ஸல்)

 

Facebook Comments

 

Leave a Reply