போலி நோட்டு புரியாத புதிர்
பெண்ணொருத்தி ஓர் கடையில் 200 ரூபாய் மதிப்புள்ள ஒரு பொருளை வாங்கினாள். கடை முதலாளியும் இலாபம் ஏதும் இன்றி அவ்விலைக்கு விற்க 1000 ரூபாய் கள்ள நோட்டை கொடுத்தாள் அவள்.அதை கவனிக்காத கடை காரர் 1000 ரூபாய் நோட்டை வாங்கி கொண்டு சில்லறை இல்லாத காரணத்தினால் பக்கத்து கடைக்கு சென்று 1000 ரூபாய் நோட்டை கொடுத்து சில்லறை வாங்கி வந்தார்.
திரும்ப கடைக்கு வந்து 200 ரூபாயை கல்லாவில் வைத்து கொண்டு மீதி 800 ரூபாயை அப் பெண்ணிடம் கொடுத்துவிட்டார். சிறிது நேரம் கழித்து போலி நோட்டை அடையாளங் கண்ட பக்கத்து கடை காரர், முதல் கடைக் காரரிடம் வந்து “இந்த 1000 ரூபாய் நோட்டு கள்ள நோட்டு” என்று சொல்லி கொடுத்து விட்டு 1000 ரூபாய் தூய நோட்டாக வாங்கி சென்றார்.
முடிவில் முதல் கடை காரருக்கு எவ்வளவு நஷ்டம்” ?
விடை – போலி நோட்டு புரியாத புதிர் Puriyatha puthir
விடை 1000 ரூபாய் ஆகும். சில்லறை இல்லாத காரணத்தினால் பக்கத்து கடைக்கு சென்று 1000 ரூபாய் நோட்டை கொடுத்து சில்லறை வாங்கிய முதல் கடைகாரர், முடிவில் அப்படியே திருப்பிக் கொடுத்திருக்கிறார். இங்கு இரு கடைக்காரர்களிடமும் எவ்வித வியாபாரமும் நடக்கவில்லை.எனவே பக்கத்து கடைக்காரரிடம் எவ்வித நட்டமுமில்லை. அப் பெண்ணிடம் பொருளாக 200 ரூபாவும், பணமாக 800 ரூபாவும் ஆக மொத்தம் 1000 ரூபாய் நட்டமடைந்தார்.
August 9, 2017 6:31 pm
முதல் கடைக்காரர்க்கு பொருளா 200 ரூபாயும் பெண்ணுக்கு மீதி கொடுத்த 800 ரூபாயும் கள்ள நோட்டுக்கு பதிலா பக்கத்து கடைக்காரருக்கு கொடுத்த 1000 ரூபாயும் சேர்த்து மொத்தம் 2000 ருபாய் நஷ்டம்
August 9, 2017 6:32 pm
முதல் கடைக்காரர்க்கு பொருளா 200 ரூபாயும் பெண்ணுக்கு மீதி கொடுத்த 800 ரூபாயும் கள்ள நோட்டுக்கு பதிலா பக்கத்து கடைக்காரருக்கு கொடுத்த 1000 ரூபாயும் சேர்த்து மொத்தம் 2000 ருபாய் நஷ்டம்