தைமூரின் விலை
மன்னர் தைமூர் தனது அரசவைக் கவிஞரான கிர்மானியுடன் உரையாடிக்கொண்டிருந்தார்.
அப்போது தைமூர் கிர்மானியை நோக்கி, ‘கவிஞரே, நான் என்னை விற்பனை செய்யத் தீர்மானித்திருக்கிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள். என்னை நீங்கள் விலை கொடுத்து வாங்குவதாக இருந்தால் எவ்வளவு பணம் கொடுப்பீர்கள்?’ என்று கேட்டார்.
கவிஞர் கிர்மானி அஞ்சாநெஞ்சம் படைத்தவர் என்று புகழப்பட்டவர். தமது மனதில் பட்டதை யாருக்கும் அஞ்சாமல் வெளியிடுபவர்.
தைமூரின் வினாவுக்கு ‘மன்னர் அவர்களே, தங்களை விலைக்கு வாங்கும் நிலை எனக்கு ஏற்பட்டால் நான் நூறு காசுகள் கொடுப்பேன்’ என்று பதிலதித்தார் கிர்மானி.
தைமூர் சிரித்துக்கொண்டே, ‘கவிஞரே, என் இடுப்பில் அணிந்திருக்கும்
கச்சையே நூறு காசு விலை பெறும்’ என்றார். கிர்மாணி பணிவோடு கூறினார். ‘மன்னரே நான் சொன்ன விலை அந்தக் கச்சைக்குத்தான்.’
Facebook Comments