முஃமின்களைத் தவிர வேறு எவரும் சுவர்க்கம் நுழையமாட்டார்கள்

, , Leave a comment

இப்னு அப்பாஸ்(றழி) தனக்கு உமர்(றழி) தெரிவித்ததாக பின்வரும் சம்பவத்தை அறிவிக்கிறார்கள்: கைபர் யுத்தம் முடிந்த பின்னர் நபி(ஸல்) அவர்களது தோழர்களிற் சிலர் அங்கு வந்தனர். மேற்படி யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களைப் பற்றி ‘அவர் ஷஹீத், இவர் ஷஹீத்’, என்றெல்லாம் பேசிக்கொண்டார்கள். ஒரு நபரை (அவரது ஜனாஸாவைக்) கடந்து சென்ற அவர்கள் ‘இவரும் ஷஹீத்’ என்றனர். அது கேட்ட நபி(ஸல்) அவர்கள் “நீங்கள் அப்படிக் கூற வேண்டாம். அவர் யுத்தத்தில் கிடைத்த கனீமத் பொருட்களில் ஒன்றான ஓர் ஆடையை அல்லது மேலங்கியை (திருட்டுத்தனமாக) அபகரித்துக்கொண்டார். அந்த ஆடையுடன் அவரை நான் நரகில் கண்டேன்” என்று கூறிவிட்டு, “உமர் இப்னு கத்தாபே! ‘நீர் சென்று முஃமின்களைத் தவிர வேறு எவரும் சுவர்க்கம் நுழையமாட்டார்கள்’ என்று மக்களுக்கு மத்தியில் சொல்வீராக” என்றார்கள்.
(ஆதாரம்: ஸஹீஹ் முஸ்லிம், கிதாபுல் ஈமான்-182)

Facebook Comments

 

Leave a Reply