முதன்மை (பகா எண், Prime Number) எண் புதிர்

, , 1 Comment

முதன்மை (பகா எண், Prime Number) எண் புதிர்

 

 

ஒன்று மற்றும் அதே எண்ணைத் தவிர வேறு எண்களால் வகுக்க முடியாத எண்கள் (உ+ம்  2,3,5,7,11,13,17,19,23,29,…..) முதன்மை எண்கள் ஆகும். இப் புதிருக்கு உங்கள் நண்பரிடம் பின்வருமாறு கூறவும்,

 

  1. 3 இலும் கூடிய முதன்மை எண்ணை நினைக்குமாறு கூறவும் உ+ம்=13
  2. அதனை வர்க்கப்படுத்தவும் (ஒரு முழு எண்ணின் வர்க்கம் என்பது அம்முழு எண்ணை அவ்வெண்ணாலேயே பெருக்கக் கிடைக்கும் எண்ணாகும்). எனவே 13*13=169
  3. பின் அதனுடன் 17 ஐக் கூட்டுமாறு :   169+17=186
  4. வரும் விடையை 12 ஆல் வகுக்க சொல்லவும்:   186/12= 15 மீதி 6
  5. உங்கள் நண்பரிடம் நீங்கள் அவர் எண்ணிய எண்ணைக் வினவாமல் மீதி 6 என ஆச்சரியமாக சட்டென பதிலளிக்கலாம்.

விளக்கம் முதன்மை (பகா எண், Prime Number) எண் புதிர்

மூன்றிலும் கூடிய முதன்மை எண்ணை வர்க்கப்படுத்தி 17 ஐக் கூட்டி 12 ஆல் வகுத்தால் மீதி 6 என கணித முறைப்படி நிறுவலாம். எனவே. எனவே எவரிடமும் மேற்படி புதிர் போட்டு விடை மீதி 6 என சட்டென பதிலளிக்கலாம்.

Facebook Comments

 

One Response

Leave a Reply