முயற்சி உடையார்

, , Leave a comment

முயற்சி உடையார்

ஆபிரகாம் லிங்கன்

ஒரு மனிதர் தன்னுடைய 21 வயதில் வியாபாரத்தில் படுதோல்வி அடைந்தார். தனது 22வது வயதில் மக்களவைத் தேர்தலில் தோல்வியைத் தழுவினர். தனது 24 வது வயதில் வியாபாரத்தில் மீண்டும் தோல்வி அடைந்தார். தனது 26 வது வயதில் இளம் மனைவியை இழந்து துன்பத்தில் மூழ்கினார். தனது 27 வயதில் நரம்புத் தளர்ச்சியால் பெரிதும் பாதிக்கப்பட்டார். தனது 34வது வயதில் கட்சிப்பதவிக்கான தேர்தலில் தோல்வியடைந்தார். தனது 45வது வயதில் செனட்டர் பதவிக்கான தேர்தலில் தோற்றார். தனது 47 வது வயதில் உதவி ஜனாதிபதிக்கான தேர்தலில் தோற்றார். மீண்டும் தனது 49வது வயதில் செனட்டர் பதவிக்கான தேர்தலில் தோல்வி. இவ்வாறாக தொடர்ச்சியான தோல்விகளைச் சந்தித்த பிறகு தனது 52வது வயதில் அமெரிக்காவின் ஜனாதிபதியாக வெற்றி பெறுகின்றார். அவர்தான் ஆபிரகாம் லிங்கன், ஆம்! எந்தத் தோல்வியும் அவருடைய முயற்சிகளை முடக்கிவிடவில்லை. முயற்சிகள் தொடர்ந்தால் தோல்விகள் எப்பொழுதும் நிலையானது அல்ல என்பதைத்தான் அவருடைய வாழ்க்கை நமக்குக் கற்றுத்தரும் பாடம். முயன்று கொண்டே இருங்கள். முடிவுகள் எவ்வாறு இருந்தாலும் அம்முடிவுகளின் மூலம் கற்றுக்கொண்ட பாடத்தை மீண்டும் மீண்டும் உங்களுடைய முதலீடாக்கி முயன்று கொண்டே இருங்கள். வெற்றியின் வெளிச்சத்தை உங்களால் விரைவில தரிசிக்க முடியும்.

Facebook Comments

 

Leave a Reply