முல்லாவின் இரகசிய வியாபாரம்.

, , Leave a comment

முல்லா புதிதாக ஒரு தொழில் தொடங்கி இருந்தார். யாருக்கும் அது என்ன தொழில் என்று தெரியாது. அவரது மனைவி யாஸ்மீனுக்கு கூட இதைபற்றி தெரியாது. ஆனால் முல்லா நாளுக்கு நாள் பணக்காரனாகி கொண்டே இருந்தார். ரஷ்யா நாட்டிற்கு சென்று வியபாரத்தில் ஈடுபட்டார். ரஷ்யா நாட்டிற்கு செல்லும்போதெல்லாம் அதிகாரிகள் நாட்டின் எல்லைப்புறத்தில் முல்லாவை சோதனை செய்வர்.

முல்லா அவரது கழுதையும் அதற்கான உணவையும் மட்டுமே கொண்டுசெல்வதை அவதனிக்க முடிந்தது. இப்படியே வருடங்கள் கடந்து போயின.

ஒரு நாள் கடைத்தெருவில் நாட்டு எல்லையில் கடமை புரியும் அதிகாரி முல்லாவை சந்திக்கிறார். முல்லாவின் ரஷ்யா வியாபாரம் பற்றி விசாரிக்கிறார். “ரஷ்யாவில் என்ன வியாபாரம் செய்கிறீங்க?” முல்லா அதற்கு “கழுதையும் அதற்கான உணவும்” என்கிறார்.

அதிகாரிக்கு கோபம் வந்த போதும் வெளிக்காட்டாமல் “வியாபாரம் என்ன செய்தீர்கள்?”

அதற்கு முல்லா “கழுதைகளை தான், இரு நளைக்கு ஒரு கழுதையை கொண்டு சென்று விற்றேன். நிறைய கொண்டு சென்றால் விடமாட்டிர்களே!”

அதிகாரிக்கு ஆச்சரியம். முல்லாவின் அறிவு திறமையை பாரட்டினார்.

 

Facebook Comments

 

Leave a Reply