மூளைக்கு வேலை கணிதப் புதிர்

, , 1 Comment

மூளைக்கு வேலை கணிதப் புதிர்

மூன்று நண்பர்கள் ஒரு கப்பலில் வேலை செய்தனர். வேலை முடிந்த பின் களைப்புடன் மூவரும் சிற்றுண்டி சாலைக்கு சாப்பிட சென்றனர். சாப்பாட்டிற்காக தோசைகளை ஓடர் செய்த அவர்கள் களைப்பில் அப்படியே தூங்கிவிட்டனர். உணவு விடுதியின் மேசை பணியாள் தோசைகளை மேசை மீது வைத்துவிட்டு சென்றான். முதலில் கண்விழித்த நபர் மூன்றில் ஒரு பங்கு தேசைகளை சாப்பிட்டுவிட்டு தூங்கினார். இரண்டாவதாக கண்விழித்த நபர் எஞ்சியதில் மூன்றிலொரு பங்கு தேசைகளை சாப்பிட்டுவிட்டு தூங்கினார். பின் மூன்றாவதாக எழும்பிய கடைசி நண்பரும் அவ்வாறே எஞ்சியதில் மூன்றிலொரு பங்கு தேசைகளை சாப்பிட்டுவிட்டு தூங்கினார். அடுத்த நாள் காலையில் வந்த உணவு விடுதியின் மேசை பணியாள் எட்டு தோசைகளை மேசை மீது கண்டார் எனின் அவர் ஆரம்பத்தில் பகிர்ந்த தோசைகளின் எண்ணிக்கை எத்தனை?

  1. 24
  2. 32
  3. 27
  4. 18

சரியான விடை மூளைக்கு வேலை கணிதப் புதிர்

ஆரம்பத்தில் பகிர்ந்த தோசைகளின் எண்ணிக்கை x எனில்,

முதலில் கண்விழித்த நபர் மூன்றில் ஒரு பங்கு தேசைகளை சாப்பிட்ட பின்

x − x/3=2x/3

இரண்டாவதாக கண்விழித்த நபர் மூன்றில் ஒரு பங்கு தேசைகளை சாப்பிட்ட பின்

2x/3− 2x/9=4x/9

மூன்றாவதாக கண்விழித்த நபர் மூன்றில் ஒரு பங்கு தேசைகளை சாப்பிட்ட பின்

4x/9− 4x/27=8x/27

எனவே எஞ்சிய தோசைகள் 8

8x/27= 8;

ஆகவே ஆரம்பத்தில் பகிர்ந்த தோசைகளின் எண்ணிக்கை

x = 27

Facebook Comments

 

One Response

Leave a Reply