மூளையைக் குழப்பும் எளிய 3 புதிர்கள்

, , Leave a comment

மூளையைக் குழப்பும் எளிய  3 புதிர்கள்

1) உங்கள் வீட்டுத் தொலைபேசியில் உள்ள அனைத்து எண்களையும் பெருக்க வரும் விடை எத்தனை?

2) கீழ் வரும் தொடரில் அடுத்து வரும் எண் என்ன?

1
11
21
1211
111221
312211

3) ஒருவன் 4 எஞ்சிய சிகரட்களைக் கொண்டு ஒரு சிகரட்டை உருவாக்கும் வித்தையை அறிந்திருந்தான். அவனிடம் 16  எஞ்சிய சிகரட்கள் வழங்கப்படின் எத்தனை சிகரட்களை உருவாக்குவான்?

விடை –  மூளையைக் குழப்பும் எளிய  3 புதிர்கள்

1) விடை = 0 ஏனெனில் பூச்சியத்தை எத்தனையால் பெருக்கினாலும் விடை பூச்சியமாகும்

2) அடுத்து வரும் எண் 13112221. எவ்வாறெனில் முதலில் 1, அடுத்து ஒரு ஒன்று (11), எனவே

1           ஒன்று
11          மேலே ஒரு ஒன்று (1-1)
21          மேலே இரண்டு ஒன்று (2-1)
1211       மேலே ஒரு இரண்டும் ஒரு ஒன்றும் (1-2-1-1)
111221  மேலே ஒரு ஒன்று, ஒரு இரண்டு, இரண்டு ஒன்று (1-1-1-2-2-1)
312211

எனவே அடுத்து ஒரு மூன்று, ஒரு ஒன்று, இரு இரண்டு, இரு ஒன்று (1-3-1-1-2-2-2-1)

3) 16 சிகரட் மூலம் 4 சிகரட்கள் செய்வான், பின் அந்த 4 ஐயும் புகைத்து வரும் 4 எஞ்சிய சிகரட்களைக் கொண்டு ஒரு சிகரட்டை உருவாக்க மொத்தமாக 5 சிகரட்களை உருவாக்குவான்.!!!!!!!!!

Facebook Comments

 

Leave a Reply