மைக்ரோ வேவ் Oven’ உருவான கதை

, , Leave a comment

உணவைச் சூடாக்குவதற்கு நாம் மைக்ரோ வேவ் அவனைப் பாவிப்போம். சமயலறைகளில் பெரும்பாலும் காணப்படும் ஒரு கருவியாக அது மாறியுள்ளது. அது சரி இக்கருவி எவ்வாறு உருவானது என்பது பற்றி அறிந்துகொள்வோமா? இரண்டாம் உலகப் போரின்போது நடந்த ஒரு சம்பவமே இன்று நாம் பாவிக்கும் மைக்ரோவேவ் அவன் கண்டுபிடிக்கக் காரணியாக அமைந்தது.

விமானங்களையும், கப்பல்களையும் கண்டறிய உதவும் ரேடார்களில் ‘மேக்னட்ரான்’ என்ற பொருள் பயன்படுத்தப்படுகின்றது. அதன் அருகில் கைகளைக் கொண்டு சென்றால் குளிருக்கு இதமாக, வெதுவெதுப்பாக இருக்கும். பெர்சி ஸ்பென்சர் என்ற அமெரிக்கர் அப்படி அடிக்கடி குளிர் காய்வார்.

ஒரு பெரிய பல்பில் இருந்துவரும் வெப்பம் அந்த ‘மேக்னட்ரானில்’ இருந்து வருகின்றது. ஒருநாள் ஸ்பென்சர் குளிர்காய்ந்து கொண்டிருந்த போது அவரது சட்டைப் பாக்கெட்டில் இருந்த மிட்டாய் உருகிவிட்டது. அப்போதுதான் அவருக்கு ‘இதைச் சமையல் உபகரணமாகப் பயன்படுத்தலாமே’ என்று தோன்றியது. அன்றிலிருந்து செய்த ஆராய்ச்சிகளின் பலனாகவே ‘மைக்ரோவேவ் அவன்’ பிறந்தது.

ஸ்பென்சரும் அவரது உதவியாளர்களும் தங்கள் ஆராய்ச்சியைத் தொடர்ந்தனர். பாப்கார்ன், பன்றி இறைச்சி போன்றவற்றைக்கொண்டு பரிசோதித்தார்கள். ஒவனுக்குள் வைக்கப்பட்ட அவை, நன்றாகச் சமைக்கப்பட்டிருந்தன. தொடர்ந்து வர்த்தக ரீதியாக மைக்ரோவேவ் அவன்கள் தயாரிக்கத் தொடங்கப்பட்டது.

1953 ஆம் ஆண்டில் உரிமம் பதிவு செய்யப்பட்டு ஏழே ஆண்டுகளில் உலகின் வசதிமிக்க சமையலறைகளில் நுழைந்துவிட்டது ‘மைக்ரோவேவ் அவன்’. பெர்சி ஸ்பென்சரின் கவனிக்கும் திறனும், ஆர்வமும் ஒரு கண்டுபிடிப்பாக மலர்ந்து இன்று பலரது சமையல் வேலையை எளிதாக்கி இருக்கிறது.

 

Facebook Comments

 

Leave a Reply