ரோம உயில் புதிர்
இது பழங்கால ரோம் நாட்டின் ரோம உயில் புதிர். ஒரு மனிதன் தான் இறக்கும் போது தன் கர்ப்பிணி மனைவுயிடம் 3500 தங்க நாணயங்களை கொடுத்து பின்வருமாறு உயில் எழுதினான்.
- பிறக்கும் குழந்தை ஆண் எனில் தாய்க்கு ஆண் குழந்தையின் அரை மடங்கு பங்கு கிடைக்க வேண்டும்
- பிறக்கும் குழந்தை பெண் எனில் தாய்க்கு பெண் குழந்தையின் இரு மடங்கு பங்கு கிடைக்க வேண்டும்
இவ் உயில் பிரகாரம் ஒரு ஆண், ஒரு பெண் என இரட்டைக் குழந்தைகள் பிறப்பின் தங்க நாணயங்கள் எவ்வாறு பங்கிடப்படவேண்டும்.
விடை ரோம உயில் புதிர்
தாய்க்கு 1000, மகனுக்கு 2000, மகளுக்கு 500 ம் ஆக பகிரப்பட வேண்டும்.
Facebook Comments