விடுகதைகள் ஒன்பது

, , Leave a comment

  1. மொட்டைத் தாத்தாத் தலையிலே இரட்டைப் பிளவு! – அது யாரு?
  2. வடிவழகு மாப்பிள்ளை வயிற்றால் நடக்கிறார். அவர் யார்?
  3. வயதான பலருக்கு புதிதாக ஒரு கை அது என்ன?
  4. வாயில்லாத குருவி வண்ண இசை பாடுது. அது என்ன?
  5. வாலால் நீர் குடிக்கும்,வாயால் பூச்சொரியும் அது என்ன?
  6. வானத்துக்கும் பூமிக்கும் ஒரே கம்பி அது என்ன ?
  7. வீட்டுக்கு வந்த விருந்தாளியை வரவேற்க ஆளில்லை. அது என்ன?
  8. வெள்ளம் வெள்ளமாக கறுப்பன் கண்ணீர் விட்டானாம் அவன் யார்?
  9. வெள்ளை வயலிலே கறுப்புவிதை. கண்ணால் பார்த்தேன்; கையால் எடுக்க முடியவில்லை! – அது என்ன?

விடைகள் விடுகதைகள் ஒன்பது

  1. பட்டாணி
  2. பாம்பு
  3. வழுக்கை / பொக்கை
  4.   வீணை
  5. விளக்கு
  6. மழை
  7. செருப்பு
  8. மழை மேகம்
  9. உழுந்து

Facebook Comments

 

Leave a Reply