தர்க்கம் செய்யாதே! உதாரணக் கதை

, , Leave a comment

தர்க்கம் செய்யாதே! உதாரணக் கதை

bsr005

வீரன் ஒருவன் வீதி வழியாகச் சென்று கொண்டிருந்தான். அங்கே ஓரிடத்தில் விந்தையான விலங்கு ஒன்று இருந்தது. பார்ப்பதற்குப் பயங்கரமாக இருந்தது. அது வருவோர் போவோரை எல்லாம் பயமுறுத்துவது போல நின்று கொண்டிருந்தது.

இதைப் பார்த்த வீரன் கோபம் கொண்டான். தன் கையில் இருந்த தடியால் அதை நன்றாக அடித்தான். இனி அந்த விலங்கு ஒழுங்காக இருக்கும் என்று நினைத்து அங்கிருந்து புறப்படத் தயாரானான்.

ஆனால் அந்த விலங்கோ முன்னைவிடப் பெரிதாகப் பருத்து மேலும் அதிகமாகப் பயமுறுத்தத் தொடங்கியது. மேலும் மேலும் அதை அடித்தான். அவன் அடிக்க அடிக்க அந்த விலங்கு பெரிதாகிக் கொண்டே வந்தது. வீதியையே அடைத்துக் கொள்ளும் அளவிற்குப் பெரிதாகி விட்டது.

என்ன செய்வது என்று அறியாமல் திகைத்து நின்றான் அவன். அந்த வழியாக வந்த அறிஞர் ஒருவர் அவனைப் பார்த்து ‘என்ன செய்கிறாய்? முதலில் அந்த விலங்கை அடிப்பதை நிறுத்து, அந்த விலங்கு என்னது என்று தெரியுமா? அதன் பெயர் தர்க்கம். அதைத் தொட்டால் பெரிதாகிக் கொண்டே செல்லும். பொருட்படுத்தாமல் விட்டு விட்டால் இருக்கும் இடமே தெரியாமல் சுருங்கி விடும்’ என்றார்.

 

 ‘நபி(ஸல்) அவர்கள்  பற்றி (அது எந்த இரவு என்று) அறிவிப்பதற்காகத் (தம் வீட்டிலிருந்து) வெளியே வந்தார்கள். அப்போது இரண்டு முஸ்லிம்கள் சச்சரவு செய்து கொண்டிருந்தார்கள். (இதைக் கண்ணுற்ற நபி(ஸல்) அவர்கள்) ‘லைலத்துல் கத்ர் பற்றி உங்களுக்கு அறிவிப்பதற்காக நான் (வீட்டைவிட்டு) வெளியேறினேன். அப்போது இன்னின்ன மனிதர்கள் தமக்குள் சச்சரவு செய்து கொண்டிருந்தனர். உடனே அது (என் நினைவிலிருந்து) அகற்றப்பட்டுவிட்டது. அதுவும் உங்களுக்கு ஒரு நன்மையாக இருக்கலாம். (ரமலான் மாதத்தின் இருபத்த) ஏழு (இருபத்து) ஒன்பது (இருபத்து) ஐந்து ஆகிய இரவுகளில் அதனைப் பெற முயலுங்கள்’ என்று கூறினார்கள்” என உபாதா இப்னு ஸாமித்(ரலி) அறிவித்தார்.

 

“மூன்று நபர்களுடைய தொழுகைகள் ஏற்றுக் கொள்ளப்படும் விஷயத்தில் அவை  அவர்களுடைய தலைக்கு மேல் ஒரு சாண்  உயரம் கூட செல்வதில்லை.அவர்களில் ஒருவர் தங்களுக்கிடையே தர்க்கம் செய்து கொள்பவர்.”

                                                                                                                                                 இறைத்தூதர் முஹம்மத் (ஸல்)

 

 

Facebook Comments

 

Leave a Reply