10 தடவைக்குள் ஓர் எண்ணை யூகிக்க ஒரு ட்ரிக் புதிர்- TAMIL MATH TRICK

, , 2 Comments

10 தடவைக்குள் ஓர் எண்ணை யூகிக்க ஒரு ட்ரிக் புதிர்- TAMIL MATH TRICK

இம் முறை மூலம் 1 இற்கும் 1000 இற்கும் இடைப்பட்ட எண்ணை அநுமானிக்கலாம்

GreaterTHanLessThan

ஓர் எண்ணை நினைக்குமாறு கூறவும் உ+ம் 334. பின் கீழுள்ள முறைப்படி கேட்கவும்

  1. அவ்வெண் 500 ஐ விட பெரிதா அல்லது சிறியதா எனக் கேட்கவும். சிறியதாயின் அவ் எண் 1 இற்கும் 500 இற்கும் இடைப்பட்டதாகும்.
  2. எனவே 500 இன் அரைவாசியான  250 ஐ விட பெரியதா அல்லது சிறியதா எனக் கேட்கவும்.  பெரியதாயின் அவ் எண் 250 இற்கும் 500 இற்கும் இடைப்பட்டதாகும்.
  3. மீண்டும் அவ்வெண் 375 ஐ விட பெரியதா அல்லது சிறியதா எனக் கேட்கவும். சிறியதாயின் அவ் எண் 250 இற்கும் 375 இற்கும் இடைப்பட்டதாகும்.

  • (250+375)/2= 312.5. ஆகவே அடுத்து நினைத்த எண் 313 ஐ விட பெரியதா அல்லது சிறியதா எனக் கேட்கவும்.  பெரியதாயின் அவ் எண் 313 இற்கும் 375 இற்கும் இடைப்பட்டதாகும்.
  • திரும்பவும் (313+375)2=344 ஐ விட பெரியதா அல்லது சிறியதா எனக் கேட்கவும். சிறியதாயின் அவ் எண் 313 இற்கும் 344 இற்கும் இடைப்பட்டதாகும்.
  • இவ்வாறே மீண்டும் தொடரவும். நினைத்த எண் 329 ஐ விட பெரியதா அல்லது சிறியதா எனக் கேட்கவும்.  பெரியதாயின் அவ் எண் 329 இற்கும் 344 இற்கும் இடைப்பட்டதாகும்.
  • அடுத்து அவ்வெண் 337 ஐ விட பெரிதா அல்லது சிறியதா எனக் கேட்கவும். சிறியதாயின் அவ் எண் 329 இற்கும் 337 இற்கும் இடைப்பட்டதாகும்.
  • பின் அவ்வெண் (329+337)/2=333 ஐ விட பெரியதா அல்லது சிறியதா எனக் கேட்கவும்.  பெரியதாயின் அவ் எண் 334,335 அல்லது 336 ஆகும்.
  • ஒன்பதாவதாக அவ்வெண் 335 ஐ விட பெரிதா அல்லது சிறியதா எனக் கேட்கவும்.
  • எனவே அவ் எண் சிறியதாயின் அவ்வெண் 334 என் யூகிக்க முடியும்.

 

இவ் இரட்டை அடி முறை மூலம் 1 இற்கும் 1000 இற்கும் இடைப்பட்ட எண்ணை 10 தடைவைக்குள் அநுமானிக்கலாம்.

 

Facebook Comments

 

2 Responses

Leave a Reply