நல்லதையே பேச முத்தான பொன் மொழிகள் “ஒரு மனிதனுடைய உள்ளம் உறுதியாகாத வரை அவனுடைய ஈமான் உறுதியாகாது. அவனுடைய நாவு உறுதியாகாத வரை அவனுடைய உள்ளம் உறுதியாகாது.” (ஆதாரம்: அஹ்மத்) “யார் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஈமான் கொள்கிறாரோ அவர் பேசினால் நல்லதையே பேசட்டும், இல்லையேல் மெளனமாக இருக்கட்டும்”…
பொன்மொழி
பூனைக் குட்டிக்கு இரங்கியதற்காக
பூனைக் குட்டிக்கு இரங்கியதற்காக இறை நேசர் ஷிப்லி (ரஹ்) அவர்கள் மரணித்ததும் அவரின் சீடர்களில் ஒருவர் அன்னாரை கனவில் கண்டார். சுவர்க்கலோகத்தில் அவர் மகிழ்ச்சியாக அழகான ஆடை அலங்காரத்துடன் காணப்பட்டார். உங்கள் வெற்றிக்கு காரணமென்ன? என சீடர் அவரிடம் வினவவினார். அதற்கு அவர் “எனது வணக்கத்தின் காரணமாக எனக்கு…
அருள்மிகு அற்புத ரமழான் மாத சிறப்புகள்
அருள்மிகு அற்புத ரமழான் மாத சிறப்புகள் “யார் ரமழான் வருவதை சந்தோஷப்படுகின்றார்களோ அவருடைய உடம்பை நரகத்தை விட்டும் அல்லாஹ் (ஹராமாக்கி) தடுத்து விடுகின்றான்” நாயகம் (ஸல்) அவர்கள்
பணிவுக்கு 3 அல்குர்ஆன் வசனங்கள்
பணிவுக்கு 3 அல்குர்ஆன் வசனங்கள் 25:63. இன்னும் அர்ரஹ்மானுடைய அடியார்கள் (யாரென்றால்) அவர்கள்தாம் பூமியில் பணிவுடன் நடப்பவர்கள்; மூடர்கள் அவர்களுடன் பேசி(வாதா)ட முற்பட்டால் “ஸலாம்” (சாந்தியுண்டாகட்டும் என்று) சொல்லி (விலகிப் போய்) விடுவார்கள். 25:72. அன்றியும், அவர்கள் பொய் சாட்சி சொல்லமாட்டார்கள்; மேலும், அவர்கள் வீணான…
உள்ளத்துக்கு ஒளியூட்டி ஊக்குவிக்கும் குர்ஆன் வசனங்கள் 10
உள்ளத்துக்கு ஒளியூட்டி ஊக்குவிக்கும் குர்ஆன் வசனங்கள் 10 “என் அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம் – நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான் – நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்; மிக்கக்…
தர்மம்
“தேவைபோக எஞ்சியதை தர்மம் செய்வதே சிறந்ததாகும். மேலும் முதலில் உம்முடைய வீட்டாரிடமிருந்து தர்மம் செய்ய ஆரம்பிப்பீராக” இறைத்தூதர் முஹம்மத் (ஸல்)
பறவையின் இதயம்
பறவையின் இதயங்களைப் போன்ற இதயங்களுடைய மக்கள் சுவர்க்கத்தில் நுழைவார்கள் இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அதாவது, பறவைகளிடம் இருப்பது போன்று தவக்கலுடைய தன்மை அவர்களின் உள்ளத்தில் இருக்கும். அல்லது அவர்களின் உள்ளம் பறவையின் உள்ளம் போல் மென்மையாக இருக்கும் என்பதாகும்.
உண்மையான விசுவாசிகள்
(உண்மையான) விசுவாசிகள் யாரென்றால், அல்லாஹ் என்று (அவன் பெயர் அவர்கள் முன்) கூறப்பட்டால், அவர்களுடைய இதயங்கள் பயந்து நடுங்கிவிடும். மேலும் அவனுடைய வசனங்கள் அவர்களுக்கு ஓதிக்காண்பிக்கப்பட்டால் அவை அவர்களுக்கு ஈமானை அதிகப்படுத்தும். அவர்கள் தங்கள் இரட்சகனின் மீது தங்கள் காரியங்களை முழுமையாக ஒப்படைப்பார்கள். குர்ஆன்(8:2)
ஹாவியா
எவனுடைய நன்மையின் எடை இலேசாகி பாவ எடை கனத்து விட்டதோ, அவன் தங்குமிடம் ஹாவியாதான். அந்த ஹாவியா இன்னதென்று நபியே! நீங்கள் அறிவீர்களா? அதுதான் சுட்டெரிக்கும் நரக நெருப்பாகும். அல்-குர்ஆன் (101 – 8, 9, 10, 11)
எல்லாமே அல்லாஹ்வுக்கே
நீர் கூறும்: “மெய்யாக என்னுடைய தொழுகையும், என்னுடைய குர்பானியும், என்னுடைய வாழ்வும், என்னுடைய மரணமும் எல்லாமே அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே சொந்தமாகும். குர்ஆன் 6.162
கருஞ்சீரகம்
‘கருஞ்சீரக விதையில் ‘சாமைத்'(‘மரணம்’) தவிர மற்ற எல்லா நோய்களுக்கும் நிவாரணம் உள்ளது’ இறைத்தூதர் முஹம்மத் (ஸல்)
பசித்தவருக்கு உணவளியுங்கள்
பசித்தவருக்கு உணவளியுங்கள்; நோயாளியை(ச் சந்தித்து) உடல் நலம் விசாரியுங்கள்; (போர்க்) கைதியை (எதிரியிடமிருந்து) விடுவியுங்கள். இறைத்தூதர் முஹம்மத் (ஸல்)
அநீதி
அநீதியிழைக்கப்பட்டவரின் சாபத்திற்கு அஞ்சுங்கள். ஏனெனில், அதற்கும் அல்லாஹ்வுக்கும் இடையே எந்தத் திரையும் இல்லை இறைத்தூதர் முஹம்மத் (ஸல்)
Facebook Comments