இப்னு உமர் (ரழி) அறிவிக்கின்றார்கள் நான் நபி முகம்மது (ஸல்) அவர்களுடன் இருந்தேன். அப்போது அன்ஸாரிகளில் ஒருவர் வந்து நபி (ஸல்) அவர்களுக்கு ஸலாம் சொல்லிவிட்டுச் சொன்னார், அல்லாஹ்வின் தூதரே முஃமின்களில் யார் சிறந்தவர் அதற்கு நபி (ஸல்) அவர்கள் சிறந்த பண்பாடுடையவர் என்றார்கள். அவர் மீண்டும் முஃமின்களில் யார் புத்திசாலி எனக் கேட்க மரணத்தை அதிகம் நினைவு படுத்துபவரும் அதன் பின்னாலுள்ள வாழ்க்கைக்காக தன்னைத் தயார் படுத்துபவருமே’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.