அபூநவாஸின் கடைசி நகைச்சுவை

அபூநவாஸின் கடைசி நகைச்சுவை

அப்பாசிய கலீபா ஹாருன் அல் ரஷீதின் அரசவையில் நகைச்சுவை புலவராயிருந்தவர் அபூநவாஸ். எல்லோரையும் சிரிக்க வைத்த அபூநவாசை பிணி சூழ்ந்து கொண்டது. மரணப்படுக்கையில் கிடந்தார். மருத்துவர்கள் அனைவரும் கைவிட்டு விட்டார்கள். அப்போது அவரை நண்பர் ஒருவர் பார்க்க வந்தார். அபூ நவாஸின் நண்பரல்லவா, அவரிடமும் நகைச்சுவை இல்லாமலா போகும். மரணப்படுக்கையிலும் விகடம் செய்து பார்க்க வேண்டும் என்று தோன்றியது நண்பருக்கு. “பயப்படாதீர்கள் பிழைத்து கொள்வீர்கள்” என்றார் நண்பர். இனி மேல் முடியாது என்பது போல் தலையசைத்தார் அபூநவாஸ்.

அப்படியென்றால் அங்கே என் தந்தையாரை கண்டால் அவருக்கு என் சலாத்தை தெரிவியுங்கள் என்றார் நண்பர். அவரது தந்தையார் ஏற்கனவே இறந்துவிட்டவர்.

அபூநவாஸ் இறப்பு நிலையையே மறந்து விட்டார். கண்களிலே கேலி மின்னியது. இதழ்களிலே இள நகையுடன் கூறினார். “நான் சுவர்க்கத்திற்கு அல்லவா போகிறேன்”

One thought on “அபூநவாஸின் கடைசி நகைச்சுவை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *