பேரீத்தம் பழம் காய்க்கும் பருவத்தில் (ஸகாத் எனும் பொது நிதியாக) ஒவ்வொருவரும் பேரீத்தம் கொண்டு வருவார்கள். நபி (ஸல்) அவர்கள் முன்னே பெரும் குவியலாகப் பேரீத்தம் பழங்கள் சேர்ந்து விடும். நபிகள் நாயகத்தின் பேரர்களான ஹஸன் (ரலி), ஹுஸைன் (ரலி) ஆகியோர் அப்பேரீத்தம் பழங்களை எடுத்து விளையாடுவார்கள். அவர்களில் ஒருவர் ஒரு நாள் ஒரே ஒரு பேரீத்தம் பழத்தை எடுத்து வாயில் போட்டுக் கொண்டார். அவரது வாயிலிருந்து அதை வெளியேற்றி விட்டு ‘முஹம்மதின் குடும்பத்தினர் ஸகாத் எனும் பொது நிதியில் எதையும் சாப்பிடக் கூடாது என்பது உனக்குத் தெரியாதா?’ என்று கேட்டார்கள்