அருள்மிகு அற்புத ரமழான் மாத சிறப்புகள்
“யார் ரமழான் வருவதை சந்தோஷப்படுகின்றார்களோ அவருடைய உடம்பை நரகத்தை விட்டும் அல்லாஹ் (ஹராமாக்கி) தடுத்து விடுகின்றான்”
நாயகம் (ஸல்) அவர்கள்
முஃமீன்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் நீங்கள் பயபக்தியாளர்களாக மாறலாம். (அல்குர்ஆன்)
“யார் ரழமான் மாதத்தில் ஈமானுடனும் நற் கூலியை ஆதரவு வைத்தவராக நோன்பு நோற்கின்றாரோ அவரின் முன் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. அறிவிப்பாளர்: அபூஹுரைரா (றலி) ஆதாரம்: – புஹாரி, முஸ்லிம்
சுவர்க்கத்தில் ‘ரய்யான்’ என அழைக்கப்படும் வாசல் ஒன்று உண்டு. அதில் கியாமத் நாளில் நோன்பாளிகள் மட்டுமே நுழைவார்கள். வேறு யாரும் நுழைய மாட்டார்கள். நோன்பாளிகள் எழுந்து அந்த ‘ரய்யான்’ எனும் வாசல் வழியாக சுவர்க்கத்தில் நுழைவார்கள். அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல் வழியே நுழைய முடியாது.
ஆதாரம்:- புஹாரி, முஸ்லிம்