பூனைக் குட்டிக்கு இரங்கியதற்காக
இறை நேசர் ஷிப்லி (ரஹ்) அவர்கள் மரணித்ததும் அவரின் சீடர்களில் ஒருவர் அன்னாரை கனவில் கண்டார். சுவர்க்கலோகத்தில் அவர் மகிழ்ச்சியாக அழகான ஆடை அலங்காரத்துடன் காணப்பட்டார்.
உங்கள் வெற்றிக்கு காரணமென்ன? என சீடர் அவரிடம் வினவவினார். அதற்கு அவர் “எனது வணக்கத்தின் காரணமாக எனக்கு இந்த உயர் பதவியை அளித்து அல்லாஹ் என்னை மன்னித்தான் என நினைத்தேன்.ஆனால் இதற்குக் கரரணம் எனது ஒரு சிரிய நற்செயலே” எனஅவர் விளக்கமளித்தார்.
கடுங்குளிர் காலம், குளிர் தாங்க முடியாது ஒரு சிறிய பூனைக்குட்டி நடுங்கிக் காண்டிருந்தது, அதன் மேல் இரக்கங் கொண்ட நான் அதன் குளிரை போக்குவதற்காக அதனை என் போர்வைக்குள் வைத்து கொண்டேன். அந்த பூனைக் குட்டிக்கு இரக்கம் காட்டிய காரணத்தால் அல்லாஹ் எனக்கு இரக்கங் காட்டினான் என்று அன்னார் கூறினார்.
எனவே நாமும் எல்லா உயிர்களிடத்திலும் இரக்கங் காட்ட வேண்டும்.
“பூமியிலுள்ளவர்கள் மீது நீங்கள் இரக்கங் கட்டுங்கள்,
வானத்திலுள்ளவர்கள் உங்கள் மீது இரக்கங் காட்டுவார்கள்.”
என்பது அண்ணல் நபியின் அமுத வாக்காகும்