நல்லதையே பேச முத்தான பொன் மொழிகள்
- “ஒரு மனிதனுடைய உள்ளம் உறுதியாகாத வரை அவனுடைய ஈமான் உறுதியாகாது. அவனுடைய நாவு உறுதியாகாத வரை அவனுடைய உள்ளம் உறுதியாகாது.” (ஆதாரம்: அஹ்மத்)
- “யார் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஈமான் கொள்கிறாரோ அவர் பேசினால் நல்லதையே பேசட்டும், இல்லையேல் மெளனமாக இருக்கட்டும்” (புஹாரி, முஸ்லிம்)
- மனிதர்கள் அவர்களுடைய நாவுகள் சம்பாதித்துக் கொண்டவைகளுக்காகவே முகம் குப்புற நரகில் வீசப்படுவார்கள். இறைத்தூதர்(ஸல்)
- “ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு பயந்து கொள்ளுங்கள். தெளிவான கூற்றைக் கூறுங்கள். அவன் உங்கள் செயல்களை சீர்படுத்தி உங்கள் பாவங்களையும் மன்னிப்பான். யார் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்பாடுகிறாரோ அவர் மகத்தான வெற்றியடைந்து விட்டார்” (அஹ்ஸாம்: 70- 71)
- ‘ஒருவனிடம் கண்காணித்து எழுதக்கூடியவர் இல்லாமல் எந்த சொல்லையும் அவன் மொழிவதில்லை’. (அல்குர்ஆன் 50:18)
- குறை சொல்லி புறம் பேசித்திரியும் ஒவ்வொருவருக்கும் கேடுதான். (அல்குர்ஆன் 104:1)
- “நாவை விட அதிக காலம்” சிறை வைக்க வேண்டிய விடயம் உலகில் வேறெதுவுமில்லை” (அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரழி))
- ‘உன்னுடைய நாவை விட உன்னுடைய இரு காதுகளுக்குள்ள உரிமையை ஏற்றுக்கொள். உனக்கு இரு காதுகளும் ஒரு நாவும் வழங்கப்பட்டுள்ளது ஏனெனில் நீ பேசுவதை விட அதிகமாக செவிமடுப்பதற்காகத்தான்” அபூதர்தா (ரழி)
- “நாவை அடக்கியாளுங்கள் -அதற்கு அதிகாரம் கொடுக்காதீர்கள். உங்கள் அதிகாரத்துக்குக் கீழே அது இயங்கட்டும். இதில்தான் வெற்றியுண்டு” இறைத்தூதர்(ஸல்)
- “தன் நாவை ஒரு மனிதன் காத்துக் கொண்டால் அவன் மானத்தை இறைவன் காத்துக் கொள்வான்!”