அறிஞரின் உண்மையான கனவு

அறிஞரின் உண்மையான கனவு

இஸ்லாமிய அறிஞரான அப்துல்லாஹ் பின் முபாரக் அவர்கள் கஃபாவிற்கு அருகாமையில் தூங்கிக்கொண்டிருக்கும்போது ஒரு கனவு கண்டார்.
அக்கனவில் 2 மலக்குகள் வானிலிருந்து இறங்கியவாறே அவர்களுகக்கிடையில் உரையாடிக்கொண்டனர்.
மலக்கு 1: உங்களுக்கு தெரியுமா எத்தனைபேர் இம்முறை ஹஜஜிற்கு வந்துள்ளனரென்று?
மலக்கு 2: ஆறு இலட்சம் பேர்.
(அப்துல்லாஹ பின் முபாரக் அவர்களும் அந்தவருடம் ஹஜ்ஜிற்கு சென்றிருக்கின்றார்.)
மலக்கு 1: எத்தனை பேரது ஹஜ் ஒப்பக்கொள்ளப்பட்டுள்ளது?
மலக்கு 2: ஒருவரது ஹஜ்ஜாவது ஒப்புக்ககொள்ளப்பட்டிருந்தால் நான் ஆச்சர்யமடைவேன்.
அப்துல்லாஹ பின் முபாரக் அவர்கள் கவலையோடு இதனை செவியுற்றுக்கொண்டிருந்தார்.
ஏராளமானோர் பல்வேறு இன்னல்களோடு, ஆறுகளையும், மலைகளையும் கடந்து பல்லாயிரக்கனக்கான பணத்தைசெலவும் செய்கின்றார்களே என எண்ணிக்கொண்டார்.
மலக்கு 1: டமஸ்கஸில் செருப்பு தைக்கும் ஏழைத்தொழிலாளி ஒருவர் இருக்கின்றார். அவர் பெயர் அலி பின் அல்-முபீக். அவர் ஹஜ்ஜுக்கு வரவில்லை. ஆனாலும் அவரது ஹஜ் அல்லாஹ்வால் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.
அப்போது அப்துல்லாஹ் பின் முபாரக் அவர்கள் விழித்துக்கொண்டார். தான் டமஸ்கஸுக்கு சென்று அந்த செருப்பு தைக்கும் தொழிலாளியை சந்திப்பதாக முடிவுசெய்தார்.
டமஸ்கஸில் சென்று யாருக்கு செருப்பு தைக்கும் தொழிலாளியான அலி பின் அல்-முபீக் அவர்களை தெரியும் என வினவ மக்கள் அவரது வீட்டிற்கு அழைத்துச்சென்றனர்.
வீட்டில் நுழைந்ததும் ஸலாம் சொல்லிவிட்டு உங்கள் பெயர் என்ன என வினவினார்.
அலி பின் அல்-முபீக் என பதில் தரப்பட்டது.
நீங்கள் என்ன தொழில் செய்கின்றீர்கள்?
நான் செருப்பு தைக்கிறேன்.
தான் யார் என்று அறிமுகப்படுத்திய அப்துல்லாஹ் பின் முபாரக் தாங்கள் ஹஜ் செய்வதற்கு ஆயத்தமானீர்களா என்று கேட்க
ஆம் நான் 30 வருடங்களாக பணத்தை சேமித்துவந்தேன். இந்த வருடம்தான் தேவையான நிதி சேர்ந்தது. ஆனால் இறைவன் அதற்கு நாடவில்லை என அலி பின் அல்-முபீக் அவர்கள் பதில்கொடுத்தார்.
அப்துல்லாஹ் பின் முபாரக்: நீங்கள் ஏன் ஹஜ்ஜிற்கு செல்லவில்லை.
அலி பின் அல்-முபீக்: அல்லாஹ் நாடவில்லை.
நடந்தது இதுதான். எனது அயல்வீட்டிற்கு சென்ற வேளை அவர்கள் இரவு உண்பதற்கு தயாராகிக்கொண்டிருந்தார்கள். எனக்கு பசி இருக்கவில்லை. ஆனாலும் ருசியான அவர்களது சாப்பாட்டைக்கண்டு அவர்கள் என்னை உண்பதற்கு அழைக்கவேண்டும் என்று நான் ஆசைப்பட்டேன். ஆனாலும் எனது அயலவர் ஏதோ காரணத்திற்காக என்னை தவிர்ப்பதை நான் உணர்ந்துகொண்டேன்.
அயலவர் என்னை பார்த்து என்ன மன்னிக்கவும். உங்களை சாப்பிட அழைக்க என்னால் முடியாமல் உள்ளது. நாங்கள் 3 நாட்களாக பட்டினியோடு இருக்கின்றோம். எனது பிள்ளைகளின் பசியை என்னால் தாங்கமுடியவில்லை. நான் வெளியெ சென்று உணவு தேடினேன். ஒரு இறந்த கழுதையின் உடல்தான் எனக்கு தென்பட்டது. நான் அதிலிருந்து ஒரு துண்டு இறைச்சியை வெட்டி எடுத்துக்கொண்டு வந்தே இன்று சமைத்துள்ளேன். இந்த இறைச்சி மோசமான பசியின் காரணமாக எமக்கு ஹலால். உங்களுக்கு இதை தர என்னால் முடியாது என பதிலளித்தார்.
அலி பின் அல்-முபீக்: எனது இதயமே அழுதுவிட்டது. நான் வீட்டிற்கு திரும்பினேன். ஹஜ்ஜிற்காக சேகரித்துவைத்திருந்த 3000 தினார்களை நான் என் அயலவனிற்கு கொடுத்தேன். நானும் பசியோடிருந்தே அந்த பணத்தை சேமித்துவந்தேன். பட்டினியோடு இருக்கும் எனது அயலவனிற்கு உதவுதல்தான் இப்போதைக்கு அவசியமானது என்று திருப்தியடைந்தேன். இன்றும் எனக்கு ஆசை இருக்கின்றது அல்லாஹ் நாடினால் நான் ஹஜ்ஜுக்கு செல்லவேண்டுமென்று.
இவற்றைச் செவியுற்றுக்கொண்டிருந்த அப்துல்லாஹ் பின் முபாரக்,
அல்லாஹ் கருணையாளன். தனது படைப்புக்களுக்கு கருணைகாட்டுபவர்கள் மீது அவன் கருணைசெலுத்துவான். அதனால்தான் இறைவன் ஹஜ்ஜிற்கு வந்த அனைவரையும் விட உங்களது ஹஜ்ஜை ஏற்று ஒப்புக்கொண்டான் எனக் கூறி ஏழைத்தொழிலாளியான அலி பின் அல்-முபீக்கை பாராட்டிவிட்டு சொன்னார்.

3 thoughts on “அறிஞரின் உண்மையான கனவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *