வாழ்க்கையின் உண்மை கதை

வாழ்க்கையின் உண்மை கதை

என் நண்பன் ஒரு நாள் என்னிடம் கூறினான். எனது மாமனார் வயதான மனிதர்.அவரது மகன்கள் தொழுகையற்றவர்கள். அவரும் தொழுகையற்றவர். அவர் பள்ளிக்குச் செல்வதில்லை, வேறு நற்காரியங்களையும் செய்வதில்லை. ஒரு நாள் நான் அவரிடம் கேட்டேன்.

உங்களுக்குத் தெரியுமா? சிங்கத்திடமிருந்து வெருண்டோடியவனைப் பற்றி. “இல்லை” என்றார் அவர். நான் ” ஓரு பையன் காட்டின் வழியே சென்று கொண்டிருந்தான். அவன் கர்ச்சனை சத்தம் கேட்டுத் திரும்பிப்பார்த்தான் . ஒரு சிங்கம் அவனை உண்பதற்கு அவனை நோக்கி வந்து கொண்டிருந்தது. சிங்கம் பின்னால் விரட்ட அவன் பயத்தால் வெருண்டோடினான். சிங்கம் அவனை அணுகும் தருவாயில்,  அருகில் ஓர் கிணற்றைக்கண்டான். கிணற்றில் பாய்ந்து அதன் கயிற்றைப் பற்றிக் கொண்டான். அதில் அவன் சற்று ஓய்வெடுக்க சிங்கத்தின் கர்ஜனையும் அடங்கியது. ஆனால் உடனே கிணற்றின் கீழால்பாம்பு சீறத்தொடங்கியது. சிங்கத்திடமிருந்தும் பாம்பிடமிருந்து எவ்வாறு தப்புவது என எண்ணும் போது. இரு எலிகள் ஒன்று வெள்ளை
மற்றது கருப்பு,  இரண்டும் கயிற்றை அரிக்க கயிறு அறும் தருவாயில், அப் பையன் கயிற்றை உலுக்கினான் எலிகள் கீழேவிழும் என்ற எண்ணத்தில். ஆனால் ஒரு முயற்சியும் பயனளிக்கவில்லை. அக் கயிறு அறும் தருவாயில், ஓர் ஆச்சரியம் !!!கயிற்றில் தேன் வழிவதைக் கண்டு அதனை சுவைத்துச் சாப்பிட்டான். அவனை சுற்றியிருந்த ஆபத்துகளான எலிகள், கர்ஜிக்கும் சிங்கம், கொடும் விஷப் பாம்பையும் மறந்தான்.” என கதையை கூறினேன்.

“இவனைப் போன்ற ஒரு முட்டாள் இருப்பானா?” என்றார் நல்லமல்கள்
அற்ற என் மாமனார்.  நான் அவருக்கு கூறினேன், அப் பையனுக்கு உதாரணம்
நீங்கள் தான். சிங்கமானது மரணம், அது என்னையும் உங்களையும் அடைந்தே தீரும்.   பாம்பு புதைக்குழி கப்ர், எங்களுக்காக காத்திருக்கிறது. வெள்ளை மற்றும் கருப்பு எலிகளாக பகலும் இரவும். எம் காலநேரங்களை உண்கின்றன. கயிற்றி வழியும் சொட்டுத் தேன் இவ் உலக இன்பமாகும். அவ் இன்பத்தில் அருமையான நேரம்,மரணம், மண்ணறை என்பவற்றை மறந்துவிட்டோம் .

என் மாமனார் விடைபெற்றார். மறு நாள், அவர் முகத்தில் ஈமானின் பிரகாசம் தென்பட்டது. அவர் வுழூ செய்தார். பள்ளிக்கு தொழச் சென்றார் அவரின் புதல்வர்களையும் திருத்தினார். என்ன ஆச்சரியம்! அவர் பள்ளிவாசல் கட்டுவதற்கும் ஸதகா செய்தார். இமாம் ஜமாத்தில் முன் ஸப்பிற்கு எங்களிடம் போட்டி போட்டார். அல்லாஹ் அவருக்கு அருள்புரிவானாக.

யா அல்லாஹ் இதனை பகிர்பவருக்கும் நற்கருமங்கள் புரிவோருக்கும் ஆயுளை
நீடிப்பாயாக, எது வரையெனில் நாம் சுவர்க்கத்தை அடைந்து எல்லம் வல்ல இறைவனின் திருப்பொருத்தத்தை அடையும் வரை.

4 thoughts on “வாழ்க்கையின் உண்மை கதை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *