பேரீத்தம் பழங்கள்

பேரீத்தம் பழம் காய்க்கும் பருவத்தில் (ஸகாத் எனும் பொது நிதியாக) ஒவ்வொருவரும் பேரீத்தம் கொண்டு வருவார்கள். நபி (ஸல்) அவர்கள் முன்னே பெரும் குவியலாகப் பேரீத்தம் பழங்கள் சேர்ந்து விடும். நபிகள் நாயகத்தின் பேரர்களான ஹஸன் (ரலி), ஹுஸைன் (ரலி) ஆகியோர் அப்பேரீத்தம் பழங்களை எடுத்து விளையாடுவார்கள். அவர்களில் ஒருவர் ஒரு நாள் ஒரே ஒரு பேரீத்தம் பழத்தை எடுத்து வாயில் போட்டுக் கொண்டார். அவரது வாயிலிருந்து அதை வெளியேற்றி விட்டு ‘முஹம்மதின் குடும்பத்தினர் ஸகாத் எனும் […]

Read More
கலீபாவின் மகனது ஒட்டகை

உமர்(றழி) அவர்கள் தனது மகனின் ஒட்டகையொன்று சந்தையில் நிற்கக் கண்டார்கள். அதன் உடல் முன்னரைவிட சற்று பருத்திருந்தது. அதனை மேய்த்தவர் மிகவுமே சிறந்த புற்தரையில் அதனை மேய்த்திருக்கலாம், என்றும் கலீபாவின் மகனது ஒட்டகை என்பதற்காக இந்த வரப்பிரசாதத்தை அவர் ஒட்டகைக்குப் பெற்றுக் கொடுத்திருக்கலாம் என்றும் நினைத்தார்கள். அதாவது, அரச செல்வாக்கினால் இப்படி நடந்திருக்கலாம் என்பது அவர்களது கணிப்பாக இருந்தது, எனவே, அதனை விற்று அதன் பெறுமதியை பைத்துல்மாலில்  சேர்த்துவிடும்படி அவர்கள் தனது மகனைப் பணித்தார்கள்.

Read More
முஃமின்களைத் தவிர வேறு எவரும் சுவர்க்கம் நுழையமாட்டார்கள்

இப்னு அப்பாஸ்(றழி) தனக்கு உமர்(றழி) தெரிவித்ததாக பின்வரும் சம்பவத்தை அறிவிக்கிறார்கள்: கைபர் யுத்தம் முடிந்த பின்னர் நபி(ஸல்) அவர்களது தோழர்களிற் சிலர் அங்கு வந்தனர். மேற்படி யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களைப் பற்றி ‘அவர் ஷஹீத், இவர் ஷஹீத்’, என்றெல்லாம் பேசிக்கொண்டார்கள். ஒரு நபரை (அவரது ஜனாஸாவைக்) கடந்து சென்ற அவர்கள் ‘இவரும் ஷஹீத்’ என்றனர். அது கேட்ட நபி(ஸல்) அவர்கள் “நீங்கள் அப்படிக் கூற வேண்டாம். அவர் யுத்தத்தில் கிடைத்த கனீமத் பொருட்களில் ஒன்றான ஓர் ஆடையை அல்லது […]

Read More
நபியவர்களின் பேணுதல்.

ஒரு தடவை நபி ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இரவு முழுவதும் விழித்துக்கொண்டு படுக்கையில் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டே இருந்தார்கள்.இதனைப் பார்த்த நபியவர்களின் மனைவியார் யாரஸுல்ல்லாஹ்! தங்களுக்கு தூக்கம் வரவில்லையா? என்று கேட்டார். அப்போது நபி ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அவர்கள்

Read More
அபூநவாஸின் கடைசி நகைச்சுவை

அபூநவாஸின் கடைசி நகைச்சுவை அப்பாசிய கலீபா ஹாருன் அல் ரஷீதின் அரசவையில் நகைச்சுவை புலவராயிருந்தவர் அபூநவாஸ். எல்லோரையும் சிரிக்க வைத்த அபூநவாசை பிணி சூழ்ந்து கொண்டது. மரணப்படுக்கையில் கிடந்தார். மருத்துவர்கள் அனைவரும் கைவிட்டு விட்டார்கள். அப்போது அவரை நண்பர் ஒருவர் பார்க்க வந்தார். அபூ நவாஸின் நண்பரல்லவா, அவரிடமும் நகைச்சுவை இல்லாமலா போகும். மரணப்படுக்கையிலும் விகடம் செய்து பார்க்க வேண்டும் என்று தோன்றியது நண்பருக்கு. “பயப்படாதீர்கள் பிழைத்து கொள்வீர்கள்” என்றார் நண்பர். இனி மேல் முடியாது என்பது […]

Read More
இறை நேசம் vs பிள்ளை பாசம்

பத்ருப்போர் முடியும்வரை ஹழ்ரத் அபூபக்கர் சித்தீக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மகன் இஸ்லாத்தை ஏற்கவில்லை. அதன்பின் தான் அவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். ஒரு நாள் ஹழ்ரத் அபூபக்கர் சித்தீக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும், மகனாரும் பத்ருப்போரை பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள். அது சமயம் மகனார் தந்தையிடம், “தந்தையே! பத்ருப்போரில் நான் காபிர்கள் அணியில் சேர்ந்து போர்செய்த நேரம்

Read More
கனவின் விளக்கம்

7047. சமுரா இப்னு ஜுன்தப்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பெரும்பாலும் தம் தோழர்களிடம் ‘உங்களில் யாரும் (இன்றிரவு) கனவு கண்டீர்களா?’ என்று கேட்பது வழக்கம். அப்போதெல்லாம், அல்லாஹ் யாரை நாடினானோ அவர் (தாம் கண்ட கனவை) அல்லாஹ்வின் தூதரிடம் எடுத்துரைப்பார். (அதற்கு அல்லாஹ்வின் தூதரும் விளக்கமளிப்பார்கள். ஒரு(நாள்) அதிகாலை நேரம் (ஃபஜ்ருத் தொழுகைக்குப் பின்) நபி(ஸல்) அவர்கள் எங்களிடம் (பின்வருமாறு) கூறினார்கள்:

Read More
அறிவு

7032. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். ‘நான் உறங்கிக் கொண்டிருந்தபோது (கனவில்) ஒரு பால்கோப்பை என்னிடம் கொண்டுவரப்பட்டது. நான் அதிலிருந்த பாலை அருந்தினேன். பின்னர் அதன் மீதியை கத்தாபின் புதல்வர் உமருக்குக் கொடுத்தேன்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், ‘இறைத்தூதர் அவர்களே! பாலுக்கு என்ன விளக்கம் கண்டீர்கள்?’ என்று வினவினர். நபி(ஸல்) அவர்கள் ‘அறிவு’ என்று பதிலளித்தார்கள். 52 Volume :7 Book :91

Read More
நல்ல மனிதர்

7028. இப்னு உமர்(ரலி) அவர்களின் தோழர்களில் சிலர் நபி(ஸல்) அவர்களின் காலத்தில் கனவு கண்டால் அதை நபி(ஸல்) அவர்களிடம் எடுத்துரைப்பது வழக்கம். இறைத்தூதர்(ஸல்) அவர்களும் அல்லாஹ் நாடிய (விளக்கத்)தைக் (கனவுக்குக்) கூறுவார்கள். நான் திருமணம் செய்து கொள்வதற்கு முன்னல் இளம் வயது வாலிபனாய் இருந்த சமயம் பள்ளிவாசலே என் வீடாய் இருந்தது. (அங்கு தான் உறங்குவேன்.) அப்போது நான் மனத்துக்குள்ளே ‘உனக்கு ஏதேனும் நன்மை நடப்பதாயிருந்தால் இவர்களைப் போன்று நீயும் (கனவு) கண்டிருப்பாய்’ என்று சொல்லிக் கொள்வதுண்டு. […]

Read More
கனவு

6985. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ உங்களில் ஒருவர் தமக்கு விருப்பமான கனவொன்றைக் கண்டால், அது அல்லாஹ்விடமிருந்தே வந்தது (என்று தெரிந்து), அதற்காக அவர் அல்லாஹ்வைப் போற்றட்டும். அதை (தமக்கு விருப்பமானவர்களிடம் மட்டும்) தெரிவிக்கட்டும். அதற்கு மாறாகத் தமக்கு விருப்பமில்லாத கனவு கண்டால்

Read More
குர்ஆன்

35:10 எவன் இஸ்ஸத்தை – கண்ணியத்தை நாடுகிறானோ, அவன், எல்லாக் கண்ணியமும் அல்லாஹ்வுக்கே உரியதாகும் (என்பதை அறிந்து கொள்ளட்டும்); தூய்மையான வாக்குகளெல்லாம் அவன் பக்கமே மேலேறிச் செல்கின்றன; ஸாலிஹான (நல்ல) அமலை எல்லாம் அவன் உயர்த்துகிறான்; அன்றியும் எவர்கள் தீமைகளைச் செய்யச்சதி செய்கிறார்களோ அவர்களுக்குக் கடினமான வேதனையுண்டு – இன்னும் இவர்களுடைய சதித்திட்டம் அழிந்து போகும். 35:11. அன்றியும் அல்லாஹ்தான் உங்களை (முதலில்) மண்ணால் படைத்தான்; பின்னர் ஒரு துளி இந்திரியத்திலிருந்து – பின் உங்களை (ஆண், […]

Read More
அடிமைப்பெண்ணின் இறையச்சம்

பெரியார் ஒருவர் கூறுவதாவது நான் ஒரு தடவை கடை வீதிக்கு சென்றபோது என்னுடைய கறுப்பு நிற ஹபஷி அடிமை பெண்ணையும் அழைத்துச் சென்றேன். அங்கு ஓர் இட்த்தில் அவளை உட்கார வைத்துவிட்டு திரும்பி வந்து அழைத்துச் செல்வதாக கூறிச் சென்றேன். நான் திரும்பி வந்து பார்த்த போது அங்கு அவளை காணவில்லை.

Read More
புத்திசாலி யார்

இப்னு உமர் (ரழி) அறிவிக்கின்றார்கள் நான் நபி முகம்மது (ஸல்) அவர்களுடன் இருந்தேன். அப்போது அன்ஸாரிகளில் ஒருவர் வந்து நபி (ஸல்) அவர்களுக்கு ஸலாம் சொல்லிவிட்டுச் சொன்னார், அல்லாஹ்வின் தூதரே முஃமின்களில் யார் சிறந்தவர் அதற்கு நபி (ஸல்) அவர்கள் சிறந்த பண்பாடுடையவர் என்றார்கள். அவர் மீண்டும் முஃமின்களில் யார் புத்திசாலி எனக் கேட்க மரணத்தை அதிகம் நினைவு படுத்துபவரும் அதன் பின்னாலுள்ள வாழ்க்கைக்காக தன்னைத் தயார் படுத்துபவருமே’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

Read More