ஒன்று பட்டாலே வாழ்வு

தன் மகன்கள் நால்வரும் ஒருவருக்கு ஒருவர் சண்டையிட்டுக் கொண்டிருப்பதைக் கண்டு வருத்தம் அடைந்தார் தந்தை. ஒற்றுமையாக இருங்கள் என்று அவர்களிடம் சொன்னார். ஆனால் அவர்களோ அவர் பேச்சைக் கேட்கவில்லை.

என்ன செய்வது என்று சிந்திதார் அவர். நல்ல வழி ஒன்று தோன்றியது. குச்சிகள் பலவற்றை ஒன்று சேர்த்து ஒரே கட்டாக கட்டினார்.

தன் மகன்களை அழைத்தார் அவர், அவர்களும் வந்தார்கள். மூத்தவனைப் பார்த்து, “இந்தக் கடடைப் பிரிக்காமல் அடிப்படியே முறி பார்ப்போம்” என்றார்.

அவனும் அந்தக் கட்டை வாங்கி முறிக்க முயற்சி செய்தான். அவனால் முடியவில்லை. அடுத்தவனைப் பார்த்து “நீ இந்தக் கட்டை முறி” என்றார்.

அவனும் முயற்சி செய்து தோற்றான். இப்படியே நான்கு மகன்களும் முயற்சி செய்து தோற்றார்கள்.

அவர்களைப் பார்த்து அவர் “இப்பொழுது நீங்கள் அந்தக் கடைப் பிரித்து ஒவ்வொரு குச்சியாக முறியுங்கள்” என்றார்.

சிறிது நேரத்தில் அவர்கள் அனைத்துக் குச்சிகளையும் மிக எளிதாக முறித்தார்கள். “மகன்களே! குச்சிகள் ஒன்றாக இருக்கும் போது எவ்வளவு முயற்சி செய்தும் உங் களால் அதை முறிக்க முடியவில்லை.

ஆனால் அவை பிரிந்து தனித்தனியாக ஆனதும் மிக எளிதாக முறித்து விட்டீர்கள். அது போல நீங்கள் நால்வரும் ஒற்றுமையாக வாழ் ந்தால் உங்களை யாராலும் வெல்ல முடியாது. நீங்கள் சண்டையிட்டுத் தனித்தனியாகப் பிரிந்தீர்களானால் உங்களை எளிதில் மற்றவர்கள் வென்றுவிடுவார்கள்” என்றார்.

“தந்தையே! எங்களுக்கு நல்லறிவு வந்து விட்டது. நாங்கள் இனி ஒற்று மையாக இருப்போம்” என்று நால்வரும் ஒரே குரலில் சொன்னார்கள்.

Facebook Comments

 

Leave a Reply